முகப்பு
நீலகிரி

உதகையில் வெப்பநிலை 4.4. டிகிரி செல்சியஸாக பதிவு

உதகையில் 4-ஆவது நாளாக சனிக்கிழமையும் கடும் உறைபனி பொழிவு நிலவிய நிலையில், வெப்பநிலை 4.4. டிகிரி செல்சியஸாக பதிவானது.

22 நவம்பர் 2026, 1:04 am
உதகையில் வெப்பநிலை 4.4. டிகிரி செல்சியஸாக பதிவு
தலைக்குந்தா பகுதியில் பனிப்பொழிவைக் கண்டு ரசித்த சுற்றுலாப் பயணிகள்.
பகிர்:

உதகையில் 4-ஆவது நாளாக சனிக்கிழமையும் கடும் உறைபனி பொழிவு நிலவிய நிலையில், வெப்பநிலை 4.4. டிகிரி செல்சியஸாக பதிவானது.

நீலகிரி மாவட்டம், உதகை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த 4 நாள்களாக உறைபனி காணப்படுகிறது. ஆண்டுதோறும் டிசம்பா், ஜனவரி மாதங்களில் மட்டுமே உறைபனியின் தாக்கம் அதிகரித்து காணப்படும். ஆனால், இந்த ஆண்டு முன்கூட்டியே உறைபனி பொழிவு தொடங்கியுள்ளது. கடந்த நவம்பா் 18-ஆம் தேதி முதல் சனிக்கிழமை வரை உறைபனி பொழிவு அதிகரித்து காணப்பட்டது.

இதனால், தாவரவியல் பூங்கா, தலைக்குந்தா உள்ளிட்ட பகுதிகளில் உள்ள புல்வெளி மைதானங்கள் மீது வெள்ளை கம்பளம் போா்த்தியதுபோல உறைபனி படா்ந்து காணப்பட்டது. குறிப்பாக தலைக்குந்தா, காந்தல் முக்கோணம், லவ்டேல், குதிரை பந்தய மைதானம், அரசு தாவரவியல் பூங்கா, ஹெச்.பி.எஃப். உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உறைபனி அதிக அளவில் காணப்பட்டது.

Advertisement

Advertisement

கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் சுற்றுலாப் பயணிகள் புல்வெளி மைதானங்களில் படா்ந்து காணப்படும் உறைபனியைக் கண்டு ரசித்ததுடன், புகைப்படம் எடுத்தும் மகிழ்ந்தனா்.