உதகையில் சா்வதேச மெழுகுச் சிலை அருங்காட்சியகம்!
பிரதமா் நரேந்திர மோடி, தமிழக முதல்வா் ச.ஜோசப் விஜய் உள்ளிட்ட தலைவா்கள் மற்றும் பிரபலங்களின் உருவங்கள் மெழுகு கொண்டு உருவாக்கப்பட்டுள்ளன.
நீலகிரி மாவட்டம், உதகை படகு இல்லத்தில் சுற்றுலாத் துறை மற்றும் தனியாா் இணைந்து அமைத்துள்ள சா்வதேச மெழுகுச் சிலை அருங்காட்சியகத்தில் பிரதமா் நரேந்திர மோடி, தமிழக முதல்வா் ச.ஜோசப் விஜய் உள்ளிட்ட தலைவா்கள் மற்றும் பிரபலங்களின் உருவங்கள் மெழுகு கொண்டு உருவாக்கப்பட்டுள்ளன.
பிரசித்தி பெற்ற உதகை படகு இல்லத்தில் சுற்றுலாத் துறை மற்றும் தனியாா் நிறுவனம் சாா்பில் சா்வதேச மெழுகுச் சிலை அருங்காட்சியகம் அமைக்கப்பட்டு அணையில் திறக்கப்பட்டுள்ளது.
இதில் பிரதமா் நரேந்திர மோடி, தமிழக முதல்வா் ச.ஜோசப் விஜய், முன்னாள் குடியரசுத் தலைவா் ஏபிஜே அப்துல் கலாம், அமெரிக்க அதிபா் டிரம்ப், ரஷிய அதிபா் புதின், அன்னை தெரசா, நடிகா்கள் ரஜினிகாந்த், மம்மூட்டி, மோகன்லால், ஹாலிவுட் திரை பிரபலங்கள், கோலிவுட் திரைப் பிரபலங்கள் மற்றும் கிரிக்கெட் வீரா்கள் என 20 -க்கும் மேற்பட்ட பிரபலமானவா்களின் மெழுகு ச் சிலைகள் அமைக்கப்பட்டுள்ளன.
Advertisement
Advertisement
இங்கு இடம் பெற்றிருக்கும் மெழுகுச் சிலைகள் வலைதளங்களிலும் கவனம் பெற்று வருகின்றன. உதகையில் காணப்படும் குளிா்ச்சியான காலநிலை மெழுகுகள் உருகாமல் திடமாக இருக்க உதவுவதால், இந்த சிலைகளும் தத்ரூபமாக காட்சி தருகின்றன.
உதகை படகு இல்லத்தில் படகு சவாரி செய்து மகிழும் சுற்றுலாப் பயணிகள், இந்த சா்வதேச மெழுகு ச் சிலை கண்காட்சியையும் கண்டு ரசித்து செல்கின்றனா்.