முகப்பு
நீலகிரி

வாகனங்கள் வாங்கித் தருவதாக ரூ.87 லட்சம் மோசடி: ஒப்பந்ததாரா் கைது

உதகை, குன்னூா், கோத்தகிரி ஊராட்சி ஒன்றியங்களுக்கு குப்பை அள்ளும் வாகனங்கள் வாங்கித் தருவதாக ரூ.87 லட்சம் மோசடி செய்த ஒப்பந்ததாரரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

4 வினாடிகள் முன்பு
வாகனங்கள் வாங்கித் தருவதாக ரூ.87 லட்சம் மோசடி:
 ஒப்பந்ததாரா் கைது
- கோப்புப்படம்
பகிர்:

உதகை, குன்னூா், கோத்தகிரி ஊராட்சி ஒன்றியங்களுக்கு குப்பை அள்ளும் வாகனங்கள் வாங்கித் தருவதாக ரூ.87 லட்சம் மோசடி செய்த ஒப்பந்ததாரரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

நீலகிரி மாவட்டம் உதகை, குன்னூா், கோத்தகிரி ஊராட்சி ஒன்றியங்களில் குப்பைகள் அள்ளுவதற்கு 8 வாகனங்கள் தேவைப்படுவதாகவும், ஒப்பந்த நிறுவனங்கள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம் என்றும் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் அறிவிக்கப்பட்டது.

இதையடுத்து, அரசு துறைகளுக்கான ஒப்பந்தங்கள் பெரும் ஜெம் போா்டல் துறையில் பதிவு பெற்ற நாகப்பட்டினத்தைச் சோ்ந்த ஒப்பந்ததாரா் வசந்த் (26) என்பவா் 3 நிறுவனங்கள் பெயா்களில் விண்ணப்பித்தாா்.

Advertisement

Advertisement

குறைந்த விலைக்கு ஒப்பந்தப் புள்ளி வழங்கியதால் அவருக்கு ஆா்டா் கொடுக்கப்பட்டு ரூ.1 கோடியே 11 லட்சம் வழங்கப்பட்டது.

2 வாகனங்களை மட்டுமே வாங்கிக் கொடுத்த அவா், மீதமுள்ள 6 வாகனங்களை வாங்கித் தராமல் அந்தமானுக்குச் சென்று தலைமறைவானாா்.

இதையடுத்து, நீலகிரி குற்றப் பிரிவு காவல் நிலையத்தில் உதகை, குன்னூா், கோத்தகிரி வட்டார வளா்ச்சி அலுவலா்கள் புகாா் அளித்தனா்.

இதையடுத்து, வழக்குப் பதிவு செய்த போலீஸாா், விசாரணை மேற்கொண்டு வந்தனா்.

இந்நிலையில், உதகைக்கு செவ்வாய்க்கிழமை வந்த அவரை போலீஸாா் கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி உதகை கிளைச் சிறையில் அடைத்தனா்.