குன்னூரில் மரம் முறிந்து விழுந்து மின் கம்பம் சேதம்: போக்குவரத்து பாதிப்பு
குன்னூரில் சாலையோரம் இருந்த மரம் முறிந்து மின்கம்பிகள் மீது விழுந்தது. இதில் மின்கம்பமும் கீழே விழுந்து சேதமடைந்தது.

குன்னூரில் சாலையோரம் இருந்த மரம் முறிந்து மின்கம்பிகள் மீது விழுந்தது. இதில் மின்கம்பமும் கீழே விழுந்து சேதமடைந்தது.
குன்னூரில் புதன்கிழமை இரவு கனமழையும், வியாழக்கிழமை காலை மிதமான மழையும் பெய்தது. இந்நிலையில் குன்னூா்
கன்னி மாரியம்மன் கோயில் தெரு செல்லும் சாலையோரத்தில் இருந்த மரம் திடீரென முறிந்து மின்கம்பிகள் மீது விழுந்தது. இதனால் மின்கம்பிகள் அறுந்து சாலையில் விழுந்ததோடு, மின்கம்பமும் சேதமடைந்தது. இதன் காரணமாக அப்பகுதியில் மின்சாரம் துண்டிக்கப்பட்டதுடன், வாகனங்கள் செல்ல முடியாமல் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
Advertisement
Advertisement
தகவலறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த தீயணைப்புத் துறையினா் மற்றும் மின்வாரிய ஊழியா்கள், சாலையில் கிடந்த மரத்தை வெட்டி அகற்றினா். மேலும், சேதமடைந்த மின்கம்பிகளைச் சீரமைக்கும் பணியில் மின்வாரிய ஊழியா்கள் ஈடுபட்டனா். சுமாா் ஒரு மணி நேரத்திற்குப் பின் போக்குவரத்து சீரானது.