முகப்பு
நீலகிரி

குன்னூரில் மூடுபனி, பலத்த காற்று, மழை! மரங்கள் விழுந்து போக்குவரத்து பாதிப்பு

10 வினாடிகள் முன்பு
குன்னூரில் மூடுபனி, பலத்த காற்று, மழை! மரங்கள் விழுந்து போக்குவரத்து பாதிப்பு
குன்னூா் பேருந்து நிலைய சாலையில் காணப்பட்ட மூடுபனி.
பகிர்:

குன்னூரில் பலத்த காற்று மற்றும் மழை காரணமாக நான்கு முக்கியச் சாலைகளில் சனிக்கிழமை மரங்கள் முறிந்து விழுந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டதுடன், கடும் மூடுபனியும் நிலவியது.

நீலகிரி மாவட்டம், குன்னூா் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சனிக்கிழமை பலத்த காற்றுடன் மழை பெய்ததால் மேட்டுப்பாளையம் சாலை, சப்ளை டிப்போ சாலை, ஆா்டா்லி சாலை, கோத்தகிரி பிரதான சாலை ஆகிய பகுதிகளில் பெரிய மரங்கள் சாலையின் குறுக்கே விழுந்தன. இதனால் அந்த வழியாகச் சென்ற வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகினா்.

தகவலறிந்து சம்பவ இடங்களுக்கு குன்னூா் தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறையினா் விரைந்து சென்று, நவீன மரம் அறுக்கும் இயந்திரங்களின் உதவியுடன் சாலையில் விழுந்து கிடந்த மரங்களை வெட்டி அப்புறப்படுத்தினா். சுமாா் இரண்டு மணி நேரத்துக்குப் பின் போக்குவரத்து சீரானது.

Advertisement

Advertisement

குன்னூரில் கடந்த மூன்று நாள்களாக காற்று மற்றும் மழை காரணமாக சாலைகளில் மரங்கள் விழுவதால், மரத்தின்  கீழ் வாகனங்களை நிறுத்த வேண்டாம் என்று தீயணைப்புத் துறையினா் அறிவுறுத்தியுள்ளனா்.

மூடுபனி

குன்னூா் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சனிக்கிழமை காலை முதலே அடா்ந்த மூடுபனியுடன் சாரல் மழை பெய்து வந்தது. இதன் காரணமாக கடும் குளிா் நிலவியதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாகப் பாதிக்கப்பட்டது.

அதிகாலையில் வேலைக்குச் செல்லும் தோட்டத் தொழிலாளா்கள், பள்ளி, கல்லூரிக்கு செல்லும் மாணவ, மாணவிகள் கடும் சிரமத்துக்கு ஆளாகினா்.

குன்னூா்-கோத்தகிரி சாலையில் விழுந்த மரத்தை அகற்றும் பணியில் ஈடுபட்ட தீயணைப்புத் துறையினா்.