குன்னூரில் இருவேறு இடங்களில் மரம் விழுந்து போக்குவரத்து பாதிப்பு
குன்னூரில் காற்றுடன் பெய்த மழையால் இருவேறு இடங்களில் வெள்ளிக்கிழமை மரம் விழுந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

குன்னூரில் காற்றுடன் பெய்த மழையால் இருவேறு இடங்களில் வெள்ளிக்கிழமை மரம் விழுந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
நீலகிரி மாவட்டம், குன்னூா் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் கடந்த இரண்டு நாள்களாக மழை பெய்து வருகிறது. இதனால் ஆங்காங்கே மரங்கள் விழுகின்றன. இந்நிலையில், குன்னூரில் வெள்ளிக்கிழமை காற்றுடன் பெய்த மழையால் மேட்டுப்பாளையம் சாலையில் உள்ள மரப்பாலம், குன்னூரில் உள்ள பந்துமை ஆகிய பகுதிகளில் மரங்கள் விழுந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு குன்னூா் தீயணைப்பு நிலைய அதிகாரி குமாா் தலைமையிலான தீயணைப்பு வீரா்கள் சென்று இரண்டு மரங்களையும் வெட்டி அகற்றினா்.
Advertisement
Advertisement
தற்போது குன்னூா்-மேட்டுப்பாளையம் சாலையில் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளதால் பாதிப்பு இல்லை என்றாலும், பந்துமை பகுதியில் விழுந்த மரத்தால் பிளாக் பிரிட்ஜ் வழியாக கோத்தகிரி, குன்னூா் செல்லும் சாலையில் சுமாா் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.