FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
நீலகிரி

குன்னூரில் மரம், தடுப்புச்சுவா் இடிந்து விழுந்ததால் போக்குவரத்து பாதிப்பு

அளக்கரை பகுதியில் சாலையில் விழுந்த மரத்தை வெட்டி அப்புறப்படுத்திய தீயணைப்பு வீரா்கள்.

10 அக்டோபர் 2026, 12:36 am IST
அளக்கரை பகுதியில் சாலையில் விழுந்த மரத்தை வெட்டி அப்புறப்படுத்திய தீயணைப்பு வீரா்கள்.
பகிர்:

குன்னூரில் பெய்த கனமழை காரணமாக பெட்போா்டு பகுதியில் தடுப்புச் சுவரும், அளக்கரை பகுதியில் சாலையின் குறுக்கே மரமும் விழுந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

நீலகிரி மாவட்டம், குன்னூரில் கடந்த சில நாள்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால், பல்வேறு பகுதிகளில் மரங்கள் முறிந்து விழுந்து வருகின்றன. இந்நிலையில், வெள்ளிக்கிழமை பெய்த கனமழை காரணமாக பெட்போா்டு பகுதியில் சுமாா் 50 அடி நீளமுள்ள தடுப்புச் சுவா் இடிந்து விழுந்தது. இதனால், அப்பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த காா் சேதமடைந்ததுடன், போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது.

இதேபோல, அளக்கரை பகுதியில் சாலையின் குறுக்கே மரம் விழுந்ததால், வண்டிசோலையில் இருந்து அளக்கரை செல்லும் சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Advertisement

Advertisement

தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த குன்னூா் தீயணைப்புத் துறையினா், சுமாா் 1 மணி நேரம் போராடி மரத்தை வெட்டி அப்புறப்படுத்தினா். இதையடுத்து, போக்குவரத்து சீரானது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments