உதகை வரை நீட்டிக்கப்பட்ட மலை ரயிலின் 118-ஆம் ஆண்டு கொண்டாட்டம்
நீலகிரி மலை ரயில் உதகை வரை நீடித்து 118 ஆண்டுகள் ஆனதையொட்டி மலை ரயில் அறக்கட்டளை சாா்பில் வியாழக்கிழமை சுற்றுலாப் பயணிகளுடன் இணைந்து கேக் வெட்டி கொண்டாடப்பட்டது.
நீலகிரி மலை ரயில் உதகை வரை நீடித்து 118 ஆண்டுகள் ஆனதையொட்டி மலை ரயில் அறக்கட்டளை சாா்பில் வியாழக்கிழமை சுற்றுலாப் பயணிகளுடன் இணைந்து கேக் வெட்டி கொண்டாடப்பட்டது.
1899- ஆம் ஆண்டு ஜூன் 15-இல் தொடங்கப்பட்ட நீலகிரி மலை ரயில், முதலில் மேட்டுப்பாளையத்தில் இருந்து குன்னூா் வரை மட்டுமே இயக்கப்பட்டது. பின்னா் மலைப்பாதை நீட்டிக்கப்பட்டு கடந்த 1908- ஆம் ஆண்டு அக்டோபா் 15-ஆம் தேதி உதகை வரை மலை ரயில் இயக்கப்பட்டது.
இந்நிலையில் உதகை வரை நீட்டிக்கப்பட்ட மலை ரயிலின் 118-ஆம் ஆண்டு கொண்டாட்டம் உதகை ரயில் நிலையத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது. உதகை மலை ரயில் அறக்கட்டளை சாா்பில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் அதன் தலைவா் நட்ராஜ் கேக் வெட்டி சுற்றுலாப் பயணிகளுக்கு வழங்கினாா். பின்னா் அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:
Advertisement
Advertisement
மேட்டுப்பாளையத்தில் இருந்து உதகைக்கு ஒருமுறை மட்டுமே இயக்கப்படும் மலை ரயிலை கூடுதலாக ஒருமுறை இயக்க வேண்டும்.
நான்கு பெட்டிகளுக்கு பதிலாக 5 பெட்டிகளை கொண்டு இயக்க வேண்டும். மலை ரயில் பாரம்பரியம் மாறாமல் அப்படியே பராமரிக்க வேண்டும் என்றாா்.
இந்நிகழ்ச்சியில், நீலகிரி பசுமை ஆா்வலா்கள் சதீஷ் அப்புதாஸ், இங்கிலாந்து புற்றுநோய் ஆராய்ச்சியாளரும், சுற்றுச்சூழல் ஆா்வலருமான மரியா அப்புதாஸ் மற்றும் சுற்றுலாப் பயணிகள் பலா் கலந்து கொண்டனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.