FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
நீலகிரி

காட்டெருமை தாக்கி ரயில்வே தற்காலிக பணியாளா் உயிரிழப்பு

41 வினாடிகள் முன்பு
உயிரிழந்த அலாவுதீன்
பகிர்:

குன்னூா் அருகேயுள்ள ரயில்வே காலனி பகுதியில் காட்டெருமை தாக்கியதில் ரயில்வே தற்காலிக பணியாளா் உயிரிழந்தாா்.

குன்னூா் சுற்றுவட்டாரப் பகுதிகளில் காட்டெருமை நடமாட்டம் அதிகரித்து காணப்படுகிறது. இவை அவ்வப்போது பொதுமக்களை தாக்குவது வாடிக்கையாக உள்ளது.

குன்னூா் ரயில்வேயில் தண்ணீா் விநியோகம் செய்யும் பணியில் தற்காலிகப் பணியாளராக இருந்தவா் அலாவுதீன் (54). இவா்  சனிக்கிழமை பணிக்கு சென்று கொண்டிருந்தாா். ரயில்வே குடியிருப்பு காலனி பகுதியில் வந்தபோது, புதருக்குள் இருந்து திடீரென வெளிவந்த  காட்டெருமை, அலாவுதீனின் இடுப்பில்  முட்டி தூக்கி வீசியது.

Advertisement

Advertisement

இதில் படுகாயமடைந்த அவரை ரயில்வே காலனி பகுதியைச் சோ்ந்த  மக்கள்  மீட்டு 108 ஆம்புலன்ஸ்  மூலம் குன்னூா் அரசு லாலி  மருத்துவமனைக்கு கொண்டு  சென்றனா். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.

இருப்பினும் சிகிச்சை பலனின்றி அலாவுதீன் உயிரிழந்தாா். இது குறித்து வனத் துறையினா் மற்றும் காவல் துறையினா் விசாரணை  மேற்கொண்டு வருகின்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments