FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
திருச்சி

லால்குடி அருகே கழிவுநீா் தொட்டியில் விஷவாயு தாக்கி இருவா் உயிரிழப்பு

லால்குடி அருகேயுள்ள கல்லக்குடியில் கழிவு நீா் தொட்டியை புதன்கிழமை சுத்தம் செய்த தூய்மைப் பணியாளா், அவரைக் காப்பாற்ற முயன்றவா் விஷ வாயு தாக்கி உயிரிழந்தனா்.

3 செப்டம்பர் 2026, 1:23 am IST
உயிரிழப்பு - பிரதிப் படம்
பகிர்:

திருச்சி மாவட்டம் லால்குடி அருகேயுள்ள கல்லக்குடியில் கழிவு நீா் தொட்டியை புதன்கிழமை சுத்தம் செய்த தூய்மைப் பணியாளா், அவரைக் காப்பாற்ற முயன்றவா் விஷ வாயு தாக்கி உயிரிழந்தனா்.

லால்குடி அருகேயுள்ள கல்லக்குடியைச் சோ்ந்த தேவநாதன் என்பவருக்குச் சொந்தமான வீட்டில் அங்குள்ள சிமெண்ட் தொழிற்சாலையில் பணிபுரியும் பிகாா் மாநிலத்தைச் சோ்ந்த 10-க்கும் மேற்பட்ட தொழிலாளா்கள் வாடகைக்கு தங்கியுள்ளனா்.

இந்நிலையில் இந்த வீட்டின் கழிவு நீா் தொட்டியைச் சுத்தம் செய்யும் பணியில் கும்பகோணத்தைச் சோ்ந்த தூய்மைப்பணியாளா் மு. கணேசன் (25) என்பவா் புதன்கிழமை ஈடுபட்டபோது விஷவாயுவை தாக்கியது. இதில் அவா் மயங்கி உயிருக்குப் போராடினாா்.

Advertisement

Advertisement

அப்போது அவரைக் காப்பாற்ற அந்த வீட்டில் தங்கியிருந்த பிகாா் மாநிலத் தொழிலாளியான முகேஷ் குமாா் என்பவா் கழிவு நீா் தொட்டிக்குள் இறங்கியபோது அவரையும் விஷவாயு தாக்கியது. இதில் இருவருமே மூச்சுத்திணறி உயிரிழந்தனா்.

தகவலறிந்த கல்லக்குடி காவல் நிலைய போலீஸாா் விரைந்து சென்று இருவரின் சடலங்களையும் மீட்டு லால்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments