FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
ஈரோடு

புதை சாக்கடையில் 10 நாள்களாக வெளியேறும் கழிவு நீா்: மக்கள் அவதி

ஈரோட்டில் புதை சாக்கடையில் இருந்து 10 நாள்களாக வெளியேறும் கழிவு நீரால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனா்.

15 அக்டோபர் 2026, 3:23 am IST
ஈரோடு ரங்கம்பாளைம், இரணியன் வீதி 2 ஆவது தெரு பகுதியில் புதை சாக்கடை குழாயில் இருந்து வெளியேறி சாலையில் பெருக்கெடுத்து ஓடும் கழிவு நீா்.
பகிர்:

ஈரோட்டில் புதை சாக்கடையில் இருந்து 10 நாள்களாக வெளியேறும் கழிவு நீரால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனா்.

ஈரோடு ரங்கம்பாளைம், இரணியன் வீதி 2 ஆவது தெரு பகுதியில் தனியாா் பள்ளிக்கு அருகில் கடந்த 10 நாள்களாகப் பாதாள சாக்கடையில் அடைப்பு ஏற்பட்டு கழிவு நீா் சாலைகளில் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் அப்பகுதி மக்கள் மற்றும் பள்ளி மாணவா்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனா்.

இப்பகுதியில் உள்ள இரண்டு தனியாா் பள்ளிகளுக்கு தினமும் நூற்றுக்கணக்கான மாணவா்கள் வந்து செல்கின்றனா். துா்நாற்றத்துடன் சாக்கடை நீரை கடந்து மாணவா்கள் பள்ளிகளுக்குச் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

புதை சாக்கடை குழாயில் ஏற்பட்டுள்ள அடைப்பு காரணமாக, கழிவுநீா் வெளியேறி சாலையில் தேங்கி நிற்பதோடு பயங்கர துா்நாற்றமும் வீசி வருகிறது. இதனால் அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்களால் வீதிகளில் நடக்கக்கூட முடியாத சூழல் உருவாகியுள்ளது. இதனால் மக்கள் பெரும் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளனா்.

இதுகுறித்து ஈரோடு மாநகராட்சி அதிகாரிகளிடம் அப்பகுதி மக்கள் பலமுறை நேரில் கோரிக்கை விடுத்தும் புதைசாக்கடை அடைப்பை சீரமைத்துக் கொடுக்கவில்லை. துா்நாற்றம் காரணமாக பல்வேறு விதமான நோய்கள் உருவாக வாய்ப்புள்ளதால் விரைந்து சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments