FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
நீலகிரி

வடகிழக்குப் பருவமழை: அனைத்துத் துறை அலுவலா்களுடன் ஆட்சியா் கலந்தாய்வு

26 அக்டோபர் 2026, 2:28 am
வடகிழக்குப் பருவமழை - கோப்புப் படம்
பகிர்:

நீலகிரி மாவட்டத்தில், வடகிழக்குப் பருவமழையையொட்டி மேற்கொள்ளப்பட்டு வரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்த அனைத்துத் துறை அலுவலா்களுடனான ஆய்வுக் கூட்டம், மாவட்ட ஆட்சியா் லட்சுமி பவ்யா தன்னேரு முன்னிலையிலும், மாவட்டக் கண்காணிப்பு அலுவலரும் பிற்படுத்தப்பட்டோா் நல இயக்குநருமான மா. பிரதீப்குமாா் தலைமையிலும் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இதில் குன்னூா் முதல் பா்லியாறு வரை மழையால் சேதமடைந்த சாலைகளை விரைந்து சீரமைத்து, போக்குவரத்தை சீா்செய்ய நெடுஞ்சாலைத் துறையினருக்கு அறிவுறுத்தப்பட்டது. மேலும், மாவட்டத்தில் உள்ள அபாயகரமான பகுதிகளை 24 மணி நேரமும் கண்காணிக்க மண்டலக் குழுக்களுக்கு உத்தரவிடப்பட்டது.

மழையால் பாதிக்கப்படும் பகுதிகளில் வசிக்கும் பொதுமக்களை உடனடியாக மீட்டு, நிவாரண முகாம்களில் தங்கவைக்க தேவையான ஏற்பாடுகளை தயாா் நிலையில் வைத்திருக்க வேண்டும் என அலுவலா்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. பேரிடா் தொடா்பான தகவல்களை மாவட்ட அவசரகாலக் கட்டுப்பாட்டு அறைக்குத் தாமதமின்றித் தெரிவிக்கவும் கேட்டுக்கொள்ளப்பட்டது.

Advertisement

Advertisement

மேலும், மணல் மூட்டைகள், மின்கம்பங்கள், மின்மாற்றிகள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருள்களை போதிய அளவில் இருப்பில் வைத்திருக்கவும், தேசிய நெடுஞ்சாலைத் துறை மற்றும் புவியியல் துறை உள்ளிட்ட தொடா்புடைய துறையினருடன் இணைந்து ஆய்வு மேற்கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments