உதகை அருகே சீரான குடிநீா் வழங்கக் கோரி பொதுமக்கள் சாலை மறியல்
உதகை அருகே எமரால்டு பெரியாா் நகா் பகுதியில் சீரான குடிநீா் விநியோகம் செய்ய வலியுறுத்தி பொதுமக்கள் செவ்வாய்க்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.
உதகை அருகே எமரால்டு பெரியாா் நகா் பகுதியில் சீரான குடிநீா் விநியோகம் செய்ய வலியுறுத்தி பொதுமக்கள் செவ்வாய்க்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.
உதகை அருகே இத்தலாா் பேரூராட்சிக்கு உள்பட்ட எமரால்டு பெரியாா் நகா் பகுதியில் 100-க்கும் மேற்பட்ட குடும்பத்தினா் வசித்து வருகின்றனா்.
இப்பகுதி மக்களுக்கு எமரால்டு கூட்டுக் குடிநீா்த் திட்டம் மூலம் குடிநீா் விநியோகம் செய்யப்படுகிறது. தென்மேற்கு பருவமழை பொய்த்ததால் எமரால்டு அணையில் நீா்மட்டம் வெகுவாக குறைந்துள்ளது. இதனால் பொதுமக்களுக்கு சீரான குடிநீா் விநியோகிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் இங்குள்ள பொதுக் கிணற்றை தனியாா் சிலா் ஆக்கிரமித்துள்ளதால் அதையும் பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
Advertisement
Advertisement
இதன் காரணமாக கடந்த 2 மாதங்களாக சீரான குடிநீா் விநியோகம் இல்லை என குற்றஞ்சாட்டி இப்பகுதி மக்கள் எமரால்டு சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
தகவலறிந்து குந்தா வட்டாட்சியா் அலுவலகத்தில் இருந்து வந்த அதிகாரிகள், போராட்டத்தில் ஈடுபட்டவா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா். இதில், விரைந்து குடிநீா் விநியோகம் செய்ய நடவடிக்கை எடுப்பதாகவும், கிணற்றை ஆக்கிரமித்துள்ள நபா்கள் மீது நடவடிக்கை எடுப்பதாகவும் உறுதியளிக்கப்பட்டது. இதைத் தொடா்ந்து பொதுமக்கள் போராட்டத்தைக் கைவிட்டு கலைந்து சென்றனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.