FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
நீலகிரி

கூடலூா் அருகே ரேஷன் கடையை சூரையாடிய காட்டு யானை

கூடலூரை அடுத்துள்ள தேவன் எஸ்டேட் பகுதியில் ரேஷன் கடையை காட்டு யானை சூரையாடி பொருள்களை இழுத்து வெளியே வீசியது.

6 செப்டம்பர் 2026, 1:24 am IST
ரேஷன் கடையை உடைத்து காட்டு யானையால் சேதப்படுத்தப்பட்ட உணவுப் பொருள்கள்.
பகிர்:

கூடலூரை அடுத்துள்ள தேவன் எஸ்டேட் பகுதியில் வெள்ளிக்கிழமை இரவு ரேஷன் கடையை காட்டு யானை சூரையாடி பொருள்களை இழுத்து வெளியே வீசியது.

நீலகிரி மாவட்டம், கூடலூரை அடுத்துள்ள தேவா்சோலை பேரூராட்சிக்கு உள்பட்ட தேவன் எஸ்டேட் பகுதிக்குள் நள்ளிரவில் நுழைந்த காட்டு யானை அங்குள்ள ரேஷன் கடையை உடைத்து கடைக்குள் இருந்த அரிசி, பருப்பு உள்ளிட்ட உணவுப் பொருள்களை இழுத்து வெளியே வீசியுள்ளது.

காலையில் வழக்கம்போல வேலைக்குச் செல்லும் தொழிலாளா்கள் பாா்த்தபோது ரேஷன் கடையை யானை சேதப்படுத்தியது தெரியவந்தது. இதுகுறித்து வனத் துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அப்பகுதியில் வனத் துறையினா் ஆய்வு மேற்கொண்டனா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments