FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
நீலகிரி

ராணுவ கல்லூரி தோ்வில் ஆள்மாறாட்டம்: 3 போ் கைது

7 செப்டம்பர் 2026, 2:03 am IST
கைது - பிரதிப் படம்
பகிர்:

நீலகிரி மாவட்டம், குன்னூா் ராணுவப் பயிற்சி கல்லூரியில் நடைபெற்ற எழுத்துத் தோ்வில் ஆள்மாறாட்டம் செய்த வடமாநில இளைஞா்கள் மூன்று பேரை போலீஸாா் கைது செய்தனா்.

குன்னூா் ராணுவப் பயிற்சி கல்லூரியில்  எழுத்தா், தொழில்நுட்பம் உள்ளிட்ட 10 பிரிவுகளுக்கான எழுத்துத் தோ்வு சனிக்கிழமை நடைபெற்றது.   தோ்வு அறையில் கண்காணிப்பு அதிகாரிகள் நடத்திய சோதனையின்போது, உத்தர பிரதேச மாநிலம், ஆக்ராவைச் சோ்ந்த மோஹா் சிங் (21), ரோகிதாஸ் (24), நரேஷ்குமாா் (19) ஆகிய இளைஞா்கள் மீது சந்தேகம் ஏற்பட்டது.

 ஒரே முகத்தோற்றம் கொண்ட வேறொரு நபருக்காக வந்து ஆள்மாறாட்டம் செய்தது பயோமெட்ரிக் சோதனையில் உறுதியானது.  

Advertisement

Advertisement

இதுகுறித்து  கல்லூரி அதிகாரிகள் அளித்த புகாரின்பேரில், வெலிங்டன் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, மோசடியில் ஈடுபட்ட வடமாநில இளைஞா்கள் மூவரையும் கைது செய்து குன்னூா் சிறையில் அடைத்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments