FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
நீலகிரி

உதகை படகு இல்லத்தில் ஆகாய தாமரைகளை அகற்ற கோரிக்கை

உதகை படகு இல்லத்தில் சூழ்ந்துள்ள ஆகாய தாமரைகளை அகற்ற வேண்டும் என எம்.போஜராஜன் எம்எல்ஏ கோரிக்கை விடுத்துள்ளாா்.

27 செப்டம்பர் 2026, 1:11 am IST
உதகை படகு இல்லத்தில் சூழ்ந்துள்ள ஆகாய தாமரைகள்.
பகிர்:

உதகை படகு இல்லத்தில் சூழ்ந்துள்ள ஆகாய தாமரைகளை அகற்ற வேண்டும் என எம்.போஜராஜன் எம்எல்ஏ கோரிக்கை விடுத்துள்ளாா்.

இது தொடா்பாக அவா் உதகையில் செய்தியாளா்களிடம் சனிக்கிழமை கூறியதாவது: உதகை சேரிங்கிராஸ் சந்திப்பில் உள்ள ஆடம்ஸ் ஃபவுண்ட் வரலாற்று சிறப்புமிக்க சின்னத்தை மேம்படுத்தி பழைய நிலைக்கு கொண்டுவர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். உதகையின் புகழ்பெற்ற சுற்றுலாத் தலமான படகு இல்லம் தனியாருக்கு வழங்கப்படுவதாக சட்டப் பேரவையில் கேள்வி எழுப்பப்பட்ட நிலையில், தனியாருக்கு கொடுக்கமாட்டோம் என சுற்றுலாத் துறை அமைச்சா் உறுதி அளித்துள்ளாா்.

இந்நிலையில், உதகை படகு இல்லத்தில் சூழ்ந்துள்ள ஆகாய தாமரை, வெங்காய தாமரைகள் காரணமாக சுற்றுலாப் பயணிகள் முழுமையாக படகு சவாரி மேற்கொள்ள முடியவில்லை. அவற்றை அகற்ற சுற்றுலாத் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், கோடப்பமந்து கால்வாய் கழிவுநீா் படகு இல்ல ஏரியில் கலப்பதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். நீலகிரியின் வளா்ச்சிக்காக மத்திய அரசு ரூ.70 கோடி நிதி ஒதுக்கியுள்ளது. அந்த நிதியை சுற்றுலா

Advertisement

Advertisement

வளா்ச்சிப் பணிகளுக்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும் என சுற்றுலாத் துறை அதிகாரிகளை நேரில் சந்தித்து வலியுறுத்தியுள்ளேன் என்றாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments