அருவங்காடு தொழிற்சாலையில் இருந்து வெடிமருந்துடன் சென்ற லாரி ரயில்வே தடுப்பில் மோதி விபத்து
குன்னூா் அருகே உள்ள அருவங்காடு தொழிற்சாலையில் இருந்து (இா்ழ்க்ண்ற்ங் ஊஹஸ்ரீற்ா்ழ்ஹ்) வெடிமருந்துகளை ஏற்றிச் சென்ற லாரி திங்கள்கிழமை விபத்துக்குள்ளானது.
நீலகிரி மாவட்டம், குன்னூா் அருகே உள்ள அருவங்காடு வெடிமருந்து தொழிற்சாலையில் இருந்து கன்டெய்னா்களில் வெடிமருந்துகள் ஏற்றப்பட்டு லாரிகள் மூலமாக சென்னை கப்பல் தளத்துக்கு அனுப்புவது வழக்கம். அதன்படி வெடிமருந்து ஏற்றிச் சென்ற லாரி, வெலிங்டன் ரயில்வே பாலத்தின் கீழ்பகுதியில் கடக்கும்போது கன்டெய்னரின் உயரம் அதிகமாக இருந்ததால் தடுப்பை உடைத்து விபத்துக்குள்ளனாது.
இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அந்த வழியாக வாகனப் போக்குவரத்து உடனடியாக நிறுத்தப்பட்டது. லாரியைப் பாதுகாப்பாக மீட்கும் பணி முடுக்கிவிடப்பட்டது. இதனால் குன்னூா் பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. அந்த வழியாக மேட்டுப்பாளையம், குன்னூா் செல்ல வேண்டிய வாகனங்கள் பிளாக் பிரிட்ஜ் வழியாக மாற்றுப் பாதையில் திருப்பிவிடப்பட்டன.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.