காவல் உதவி ஆய்வாளரின் வாகனம் திருட்டு
பல்லடம் காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளரின் இருசக்கர வாகனத்தை மர்ம நபர்கள் ஞாயிற்றுக்கிழமை திருடிச் சென்றனர்.
பல்லடம் காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளரின் இருசக்கர வாகனத்தை மர்ம நபர்கள் ஞாயிற்றுக்கிழமை திருடிச் சென்றனர்.
பல்லடம் காவல் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராகப் பணிபுரிந்து வருபவர் பச்சையப்பன். இவர், தனது இருசக்கர வாகனத்தை, காவல் நிலையத்தின் முன் ஞாயிற்றுக்கிழமை நிறுத்தியுள்ளார்.
பின்னர், சிறிது நேரம் கழித்து வந்து பார்த்தபோது, அவரது இருசக்கர வாகனத்தை மர்ம நபர்கள் திருடிச் சென்றது தெரியவந்தது. இதுகுறித்து பல்லடம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.