ஜெய் ஸ்ரீ ராம் பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
அவிநாசிபாளையம் ஜெய் ஸ்ரீ ராம் பொறியியல் கல்லூரியில் வேலைவாய்ப்பு தொடர்பான கருத்தரங்கம் திங்கள்கிழமை நடைபெற்றது.
அவிநாசிபாளையம் ஜெய் ஸ்ரீ ராம் பொறியியல் கல்லூரியில் வேலைவாய்ப்பு தொடர்பான கருத்தரங்கம் திங்கள்கிழமை நடைபெற்றது.
இக்கருத்தரங்குக்கு கல்லூரி முதல்வர் ஆர்.மகுடீஸ்வரன் தலைமை வகித்தார். சென்னை ராணுவப் பாதுகாப்பு ஆராய்ச்சி, அபிவிருத்தி முதுநிலை தொழில்நுட்ப அதிகாரி எஸ்.கிருஷ்ணகுமார் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசியது:
மறைந்த குடியரசு முன்னாள் தலைவர் அப்துல் கலாம், 2020 ஆண்டில் இந்தியாவை வல்லரசு நாடாக ஆக்க வேண்டும் என்று கனவு கண்டார். அவரது கனவை நனவாக்குவது தான் நாம் அவருக்கு செலுத்தும் மரியாதையாகும்.
Advertisement
Advertisement
இளைஞர்கள் புதிய ஆராய்ச்சிகளில் ஈடுபட வேண்டும். புதிய கண்டுபிடிப்புகளை நாட்டுக்கு அற்பணிக்க வேண்டும். மேலும், சுற்றுச்சூழல், துப்புரவுப் பணி, மரம் வளர்ப்பு போன்ற சமுதாயப் பணிகளை செய்திட இளைஞர்கள் முன்வர வேண்டும் என்றார். இக்கருத்தரங்கில் மாணவ, மாணவிகள் பலர் கலந்து கொண்டனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.