✕
முகப்பு
திருப்பூர்

லாரி-கார் மோதல்: பாதிரியார் சாவு

பல்லடம் அருகே திங்கள்கிழமை காரும், லாரியும் நேருக்கு நேர் மோதிக் கொண்ட விபத்தில் பாதிரியார் உயிரிழந்தார்.

Updated On : 15 செப்டம்பர் 2015, 4:51 am
பகிர்:

பல்லடம் அருகே திங்கள்கிழமை காரும், லாரியும் நேருக்கு நேர் மோதிக் கொண்ட விபத்தில் பாதிரியார் உயிரிழந்தார்.

ஈரோடு மாவட்டம், சிவகிரியைச் சேர்ந்த பாதிரியார் ஜான்சன்(51). இவர், தனது காரில் கோவைக்கு திங்கள்கிழமை சென்று கொண்டிருந்தார். மாதப்பூர் அருகே கோவை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சென்றபோது, கோவையிலிருந்து கரூர் நோக்கிச் சென்ற மணல் லாரி, கார் மீது மோதியதில், ஜான்சன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

லாரியைத் தொடர்ந்து வந்த கார், லாரி மீது மோதியதில் கோவையைச் சேர்ந்த செல்வராஜ், கோதைநாயகி, கோவிந்தராஜ், அந்தோனி ஆகியோர் காயம் அடைந்தனர்.இதையடுத்து, அவர்கள் அனைவரும் சிகிச்சைக்காக பல்லடம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். பல்லடம் போலீஸார் விசாரிக்கின்றனர்.

Advertisement

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments