உழவாலயம் அமைக்க 6-ஆம் தேதி அடிக்கல் நாட்டு விழா
பல்லடத்தில் உழவாலயம் அமைக்க மார்ச் 6-ஆம் தேதி அடிக்கல் நாட்டு விழா நடைபெறவுள்ளது.
பல்லடத்தில் உழவாலயம் அமைக்க மார்ச் 6-ஆம் தேதி அடிக்கல் நாட்டு விழா நடைபெறவுள்ளது.
உழவர் உழைப்பாளர் கட்சி, தமிழக விவசாயிகள் சங்கத்தின் சார்பில் உலக நலன் கருதி 108 கோமாதா பூஜை, உழவர் வளம் காண 108 யாக வேள்வி, உழவாலயம் அடிக்கல் நாட்டு விழா மார்ச் 6-ஆம் தேதி காலை 6 மணி முதல் நடைபெறவுள்ளது.
இதுகுறித்து, உழவர் உழைப்பாளர் கட்சித் தலைவர் செல்லமுத்து செய்தியாளர்களிடம் வியாழக்கிழமை கூறியதாவது:
Advertisement
Advertisement
பல்லடம், கோடங்கிபாளையத்தில் கோவை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் 80 சென்ட் நிலத்தில் அனைத்து விவசாயிகளும் பயன் பெறும் வகையில் உழவாலயம் அமைக்கப்படவுள்ளது. இதற்கான அடிக்கல் நாட்டு விழாவையொட்டி உழவர் நலமும், வளமும் பெற 108 கோமாதா, யாக வேள்வி பூஜை நடைபெறும். இதை கோவை காமாட்சிபுரி ஆதீனம் ஸ்ரீசிவலிங்கேஸ்வரசுவாமிகள் முன்நின்று நடத்தி வைக்கவுள்ளார் என்றார்.
இப்பேட்டியின்போது உழவர் உழைப்பாளர் கட்சி மாநிலப் பொருளாளர் பாலசுப்பிரமணியம், மாநிலச் செயலாளர் ஈஸ்வரன், திருப்பூர் மாவட்ட இளைஞரணித் தலைவர் வாவிபாளையம் சோமசுந்தரம் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.