மூதாட்டியைக் கொலை செய்தவர் கைது
இரண்டு பவுன் நகைக்காக பட்டப்பகலில் வீட்டில் தனியாக இருந்த மூதாட்டியைக் கழுத்தை நெறித்துக் கொலை செய்த நபர் கைது செய்யப்பட்டார்.
இரண்டு பவுன் நகைக்காக பட்டப்பகலில் வீட்டில் தனியாக இருந்த மூதாட்டியைக் கழுத்தை நெறித்துக் கொலை செய்த நபர் கைது செய்யப்பட்டார்.
குன்னத்தூர், வெங்கமேடு, ஒடத்தலாம்பதி பகுதியில் வசித்து வந்தவர் சரோஜா (80). இவர் தனது மகள்வழிப் பேரன் ஞானவேல் (25) என்பவருடன் வசித்து வந்தார். இந்த நிலையில், கடந்த ஜூலை 2ஆம் தேதி வீட்டில் தனியாக இருந்த மூதாட்டி சரோஜாவை கழுத்தை நெறித்துக் கொலை செய்து, அவர் அணிந்திருந்த 2 பவுன் சங்கிலி, 3 கிராம் மோதிரத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்துச் சென்றனர்.
இது தொடர்பாக குன்னத்தூர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வந்தனர்.
இது தொடர்பாக மூதாட்டியின் குடும்பத்தாருடன் தொடர்பில் இருந்து வந்த பாலமுருகனிடம் போலீஸார் தீவிர விசாரணை செய்தனர். விசாரணையில், பாலமுருகனும், அவரது உறவினரான சுகுமாரும் சேர்ந்து மூதாட்டி சரோஜாவை கொலை செய்துவிட்டு நகைகளை கொள்ளையடித்துச் சென்று அடகு வைத்துள்ளனர் என்பது தெரியவந்தது.
இதையடுத்து போலீஸார் பாலமுருகனை கைது செய்து கோவை மத்திய சிறையில் அடைத்தனர். அவரது உறவினரான சுகுமாரை போலீஸார் தேடி வருகின்றனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.