முருங்கைக்காய் விலை சரிவு
வெள்ளக்கோவிலில் முருங்கைக்காய் விலை கடந்த இரண்டு வாரங்களாகத் தொடர்ந்து சரிந்து வருகிறது.
வெள்ளக்கோவிலில் முருங்கைக்காய் விலை கடந்த இரண்டு வாரங்களாகத் தொடர்ந்து சரிந்து வருகிறது.
வெள்ளக்கோவில், முத்தூர் சாலையில் வாரந்தோறும் கூடும் தனியார் கொள்முதல் மையத்தில் முருங்கைக்காய்கள் கொள்முதல் செய்யப்படுகின்றன. சுற்று வட்டார விவசாயிகள் முருங்கைக்காய்களை இங்கு விற்பனைக்குக் கொண்டு வருகின்றனர். இந்த வாரம் முருங்கைக்காய் வரத்து 16.75 டன் ஆக இருந்தது.
கடந்த வாரத்தைவிட 25 சதவீத அளவுக்கு வரத்து அதிகமானதால் விலையும் ஒரு ரூபாய் குறைந்து கிலோ ரூ. 6க்கு விற்பனையானது. விலைச் சரிவு விவசாயிகள் மத்தியில் கவலையை ஏற்படுத்தியுள்ளது. வரும் வாரங்களில் விலை மேலும் குறைய வாய்ப்புள்ளதாக சந்தை நிலவரங்கள் தெரிவிக்கின்றன.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.