FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

சீருடைப் பணியாளர் தேர்வுக்கு விண்ணப்பிப்போர் கவனத்துக்கு: உதவி மையம் திறப்பு

சீருடைப் பணியாளர் தேர்வுக்காக விண்ணப்பிப்போருக்கு உதவும் வகையில் திருப்பூர் மாநகரக் காவல் ஆணையம் சார்பில் உதவி மையம்  திறக்கப்பட்டுள்ளது.

30 ஜனவரி 2024, 10:07 pm IST
பகிர்:

சீருடைப் பணியாளர் தேர்வுக்காக விண்ணப்பிப்போருக்கு உதவும் வகையில் திருப்பூர் மாநகரக் காவல் ஆணையம் சார்பில் உதவி மையம்  திறக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து திருப்பூர் மாநகரக் காவல் ஆணையர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்தி: 
தமிழக சீருடைப் பணியாளர் தேர்வுக்கு விண்ணப்பிப்போருக்கு உதவும் வகையில் திருப்பூரில் உதவி மையம் திறக்கப்பட்டுள்ளது. தமிழக சீருடைப் பணியாளர் தேர்வுக் குழுமம் மூலம் அறிவிக்கப்பட்டுள்ள 202 சார்பு ஆய்வாளர் (விரல்ரேகை) பணியிடங்களுக்கான போட்டித் தேர்வுக்கு இணையதளம் மூலம் மட்டுமே விண்ணப்பிக்கலாம். விண்ணப்பம் பூர்த்தி செய்வதில் ஏற்படும் சந்தேகங்களைத் தெளிவுபடுத்தி, விண்ணப்பதாரர்களுக்கு உதவும் வகையில் திருப்பூர் மாநகரக் காவல் துறை சார்பில் 29ஆம் தேதி முதல் இயங்கும் வகையில் உதவி மையம் தொடங்கப்பட்டுள்ளது. இதற்காக மாநகரக் காவல் அலுவலகத்தை நேரிலோ அல்லது உதவி மையத்தை 94981 81332 செல்லிடப்பேசி எண்ணிலோ தொடர்பு கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments