FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

இளைஞர்கள் தொழில் முனைவோராக உருவாக வேண்டும்: ஆட்சியர் கே.எஸ்.பழனிசாமி

இளைஞர்கள் புதிய தொழில் முனைவோராக உருவாக வேண்டும் என்று திருப்பூர் மாவட்ட ஆட்சியர் கே.எஸ்.பழனிசாமி தெரிவித்துள்ளார். 

30 ஜனவரி 2024, 11:25 pm IST
பகிர்:

இளைஞர்கள் புதிய தொழில் முனைவோராக உருவாக வேண்டும் என்று திருப்பூர் மாவட்ட ஆட்சியர் கே.எஸ்.பழனிசாமி தெரிவித்துள்ளார். 
திருப்பூர் சிக்கண்ணா அரசு கலைக் கல்லூரியில், தொழில் மேம்பாட்டு விழிப்புணர்வு முகாம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இந்த முகாமைத் தொடங்கி வைத்த அவர் பேசியதாவது: 
தமிழக அரசின் கீழ் இயங்கும் தன்னாட்சி நிறுவனமான தொழில்முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம், புதிதாக கல்வி புத்தாக்க மற்றும் தொழில் முனைவோர் மேம்பாட்டுத் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் நோக்கம் தமிழகத்தில் உள்ள 88 அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் இறுதியாண்டு படிக்கும் மாணவ, மாணவியருக்கு பல்வேறு துறையில் உள்ள வாய்ப்புகளை எடுத்துரைப்பதாகும். மேலும், சுயமாக தொழில் துறையில் ஈடுபடுவதற்கும், வழிமுறைகளை கூறுவதற்குத்தான் இந்த விழிப்புணர்வு முகாம் நடத்தப்படுகிறது. இளைஞர்களுக்கான வேலைவாய்ப்புத் திட்டத்தின் கீழ் ரூ.10 லட்சம் வரையிலான சுய தொழில் தொடங்குவதற்கான கடன் வழங்கப்பட்டு வருகிறது.  அதே வேளையில்,  பிரதமரின் சுய வேலைவாய்ப்பத்திட்டத்தின் கீழ் ரூ.8.15 லட்சம் மானியத்துடன் ரூ. 25 லட்சம் வரையிலும் மற்றும் தமிழக அரசின் நீட்ஸ் திட்டத்தின் கீழ் 25 சதவீத மானியத்துடன் ரூ.1 கோடி முதல் ரூ. 5 கோடி வரை சுய தொழில் தொடங்குவதற்கான கடன் வழங்கப்பட்டு வருகிறது. இத்தகைய திட்டங்களை பயன்படுத்தி  இளைஞர்கள் வேலை தேடுபவர்களாக இல்லாமல் வேலை கொடுப்பவர்களாக மாற வேண்டும். இளைஞர்கள் கல்லூரி படிப்பை முடித்தவுடன் தொழில் துறையில் தங்களை முழுமையாக ஈடுபடுத்தி புதிய தொழில் முனைவோராக உருவாக வேண்டும் என்றார். 
இந்நிகழ்ச்சியில், சிக்கண்ணா கல்லூரி முதல்வர் ராமையா, மாவட்ட தொழில்மைய பொது மேலாளர் கந்தசாமி, தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனத்தின் பயிற்சி ஒருங்கிணைப்பாளர் சிவனேசன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments