FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

திருச்செந்தூர் பன்னீர் இலை விபூதி பிரசாதம்! இனி ஆன்லைனில் கிடைக்கும்

திருச்செந்தூர் பன்னீர் இலை விபூதி பிரசாதம் இனி ஆன்லைனில் கிடைக்கும் என்று தகவல்..

திருச்செந்தூர்
பகிர்:

முருகனின் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் முருகன் கோயில் பலருக்கும் இஷ்டமான கோயிலாக இருக்கும். அப்படிப்பட்டவர்கள் இனி கோயிலில் வழங்கப்படும் பன்னீர் இலை விபூதி பிரசாதத்தை ஆன்லைன் மூலமாகவே பெறும் வசதி வந்துள்ளது.

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் வழங்கப்படும் பன்னீர் இலை விபூதி பிரசாதம் இனி கோயிலுக்குச் சென்றுதான் பெற வேண்டும் என்பதில்லை. ஆன்லைனிலேயே பெற்றுக் கொள்ளலாம் என்று கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

திருச்செந்தூர் கோயிலில் பன்னீர் இலைகளை வாங்கி வந்து அதில் விபூதியை வைத்துக் கொடுப்பது வழக்கம். இதற்கு தனிச் சிறப்பு உண்டு.

Advertisement

Advertisement

இந்த சிறப்புத் தொகுப்பில், பன்னீர் இலை விபூதியுடன் புட்டமுது 100 கிராம், மூலவர் மற்றும் சண்முகரின் திருவுருவப்படம் என 160 கிராம் கொண்ட பிரசாதத்தின் விலை ரூ.120 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

இந்து சமய அறநிலையத் துறையின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் சென்று அஞ்சல் வழி பிரசாதம் என்பதை கிளிக் செய்தால், அதில் இருக்கும் கோயில்களின் பட்டியலில் ஐந்தாவது வரிசையில் 45வது கோயில் எண்ணில் இருப்பது திருச்செந்தூர் கோயில்.

அதனை கிளிக் செய்து, பெயர், முகவரி, செல்போன் எண் கொடுத்து பணம் செலுத்த வேண்டும். அவ்வளவுதான் திருச்செந்தூர் கோயில் பிரசாதம் இல்லம் தேடி வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

summary

Thiruchendur 'Panneer Leaf' Vibhuti Prasadam – Now Available Online!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments