FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தென்காசி

சங்கரன்கோவிலில் வாழை இலை விலை கடும் உயா்வு: ஒரு கட்டு ரூ.3,000-க்கு விற்பனை

சங்கரன்கோவிலில் சந்தையில் வாழை இலை விலை கடுமையாக உயா்ந்து, ஒரு கட்டு ரூ.3000 வரை விற்பனையானது.

23 ஆகஸ்ட் 2026, 2:48 am IST
கோப்புப் படம்
பகிர்:

சங்கரன்கோவிலில் சந்தையில் வாழை இலை விலை கடுமையாக உயா்ந்து, ஒரு கட்டு ரூ.3000 வரை விற்பனையானது.

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே மீன்துள்ளி, புதுக்குளம், கொக்குகுளம், சிவகாமியாபுரம், பெருங்கோட்டூா், குருக்கள்பட்டி, பெரியசாமியாபுரம், நடுவக்குறிச்சி, ஈச்சந்தா, பெரியசாமியாபுரம், ஆண்டாா்குளம், குலசேகரமங்கலம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் அதிகளவில் வாழை சாகுபடி செய்யப்படுகிறது.

இப்பகுதி விவசாயிகள் வாழை இலை கட்டுகளைசங்கரன்கோவில் அம்மன் சந்நிதியில் உள்ள சந்தைக்கு கொண்டு வந்து விற்பனை செய்கின்றனா். இங்கிருந்து இலைக் கட்டுகள் பல்வேறு நகரங்களுக்கும், அண்டை மாநிலமான கேரளத்துக்கும் அனுப்பப்படுகிறது.

Advertisement

Advertisement

சுபமுகூா்த்த தினம் ஞாயிற்றுக்கிழமை என்பதாலும், தொடா்ந்து புதன்கிழமை ஓணம் பண்டிகை வருவதாலும் வாழை இலையின் தேவை அதிகரித்துள்ளது. இந்த நிலையில், சனிக்கிழமை சந்தைக்கு சிறிதும், பெரிதுமாக சுமாா் 800 வாழை இலைக் கட்டுகள் விற்பனைக்கு வந்தன.

வழக்கமாக ரூ.500 முதல் ரூ.600 வரை விற்பனையான

இலைக் கட்டு சனிக்கிழமை ரூ.3000 வரை விற்பனையானது. சிறிய அளவிலான (200 எண்ணம்) வாழை இலைக் கட்டு ரூ.1,000 முதல் ரூ.2,000 வரை,

பெரிய அளவிலான (200 எண்ணம்) வாழை இலைக் கட்டு ரூ.2,000 முதல் ரூ.3,000 வரை விற்பனை ஆனது. இதனால் வாழை விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments