FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
வணிகம்

ஆகஸ்ட் முதல் மாருதி கார்களின் விலை ரூ.30,000 வரை அதிகரிப்பு!

ஆகஸ்ட் முதல் அனைத்து வாகன கார்களின் விலையை ரூ. 30,000 வரை உயர்த்தவுள்ளதாக மாருதி சுஸுகி இந்தியா இன்று அறிவித்தது.

Updated On : 22 ஜூலை 2026, 6:56 pm IST
மாருதி சுசூகி - கோப்புப் படம்
பகிர்:

உற்பத்தி செலவைத் தொடர்ந்து, ஏற்பட்டு வரும் உயர்வை ஓரளவுக்கு ஈடுசெய்யும் வகையில், 2026 ஆகஸ்ட் முதல் அனைத்து வாகன மாடல்களின் விலையை ரூ. 30,000 வரை உயர்த்தவுள்ளதாக மாருதி சுஸுகி இந்தியா இன்று அறிவித்தது.

விலை உயர்வுக்கான அளவு ஒவ்வொரு மாடலுக்கும் மாறுபடும் என்று மாருதி சுஸுகி இந்தியா தெளிவுப்படுத்தியுள்ளது.

உற்பத்தி செலவுகளைத் தொடர்ந்து ஏற்பட்டு வரும் உயர்வை கருத்தில் கொண்டு, நிறுவனம் தனது அனைத்து ரக வாகன மாடல்களின் விலையை ரூ. 30,000 வரை உயர்த்த முடிவு செய்துள்ளதாக தெரிவித்தது.

Advertisement

Advertisement

இந்த விலை உயர்வானது அடுத்த மாதம் ஆகஸ்ட் 2026 முதல் அமலுக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த சில மாதங்களாக, செலவுக் குறைப்பு நடவடிக்கைகள் மூலம், தாக்கத்தை முடிந்தவரை குறைக்க நிறுவனம் தொடர்ந்து முயற்சித்து வந்தது. இருப்பினும், பணவீக்க அழுத்தம் அதிகமாக இருப்பதாலும், அதிகரித்த செலவின் ஒரு பகுதியை சந்தையின் மீது சுமத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளதாக நிறுவனம் தெரிவித்தது. அதே வேளையில், வாடிக்கையாளர்கள் மீதான தாக்கத்தை முடிந்தவரை குறைவாக வைத்திருக்க நிறுவனம் தொடர்ந்து உறுதிபூண்டுள்ளதாக தெளிவுப்படுத்தியுள்ளது.

மாருதி காரின் ஆரம்ப நிலை வாகனமாகன எஸ்-பிரெஸ்ஸோ முதல் பிரீமியம் ரக இன்விக்டோ வரையிலான பல்வேறு கார்கள் மற்றும் எஸ்யூவி ரக வாகனங்களை மாருதி விற்பனை செய்து வருகிறது. தற்போது இவற்றின் விலை ரூ. 3.5 லட்சம் முதல் ரூ. 28.70 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) வரை உள்ளது குறிப்பிடத்தக்கது.

summary

India on Tuesday said it will hike prices of its vehicles across models by up to Rs 30,000 from August.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments