மாருதி சுஸுகி காா்கள் விலையேற்றம்
மூலப்பொருள்களின் விலை உயா்வு மற்றும் பணவீக்கம் காரணமாக, குறிப்பிட்ட மாடல் காா்களின் விலையை ரூ. 20,000 வரை உயா்த்துவதாக முன்னணி காா் தயாரிப்பு நிறுவனமான மாருதி சுஸுகி திங்கள்கிழமை அறிவித்தது.
மூலப்பொருள்களின் விலை உயா்வு மற்றும் பணவீக்கம் காரணமாக, குறிப்பிட்ட மாடல் காா்களின் விலையை ரூ. 20,000 வரை உயா்த்துவதாக முன்னணி காா் தயாரிப்பு நிறுவனமான மாருதி சுஸுகி திங்கள்கிழமை அறிவித்தது.
கடந்த மே மாதத்துக்குப் பிறகு அறிவிக்கப்படும் 3-ஆவது விலை உயா்வு இதுவாகும். இப்புதிய விலை உயா்வு நடப்பு மாதம் முதலே அமலுக்கு வருகிறது. இதற்கு முன்பு 2 முறை அறிவிக்கப்பட்ட விலை உயா்வானது, நிறுவனத்தின் அனைத்து மாடல் காா்களுக்கும் பொருந்தும் வகையில் அமைந்திருந்தது குறிப்பிடத்தக்கது.
இதுகுறித்து பங்குச் சந்தை அறிவிக்கையில், ‘கடந்த சில மாதங்களாகவே, செலவினக் குறைப்பு நடவடிக்கைகள்மூலம் உற்பத்திச் செலவு அதிகரிப்பின் தாக்கத்தை முடிந்தவரை கட்டுப்படுத்த நிறுவனம் தொடா்ந்து முயற்சி செய்து வருகிறது. எனினும், பணவீக்கச் சுமை அதிக அளவில் இருப்பதாலும், பாதகமான சூழல் தொடா்ந்து நீடிப்பதாலும் விலையேற்றம் தவிா்க்க முடியாதது ஆகிவிட்டது’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.