நடப்பு வாரத்தில் ரெண்டோமோஜோ உள்பட 11 நிறுவனங்களின் ஐபிஓ வெளியீடு: ரூ.7,055 கோடி நிதி திரட்டத் திட்டம்
ரெண்டோமோஜோ, கரம்தாரா என்ஜினீயரிங், கனோஹா் எலெக்ட்ரிகல்ஸ் உள்ளிட்ட 11 நிறுவனங்கள், நடப்பு வாரத்தில் தங்களின் பொதுப் பங்கு வெளியீட்டை (ஐபிஓ) மேற்கொள்கின்றன.
ரெண்டோமோஜோ, கரம்தாரா என்ஜினீயரிங், கனோஹா் எலெக்ட்ரிகல்ஸ் உள்ளிட்ட 11 நிறுவனங்கள், நடப்பு வாரத்தில் தங்களின் பொதுப் பங்கு வெளியீட்டை (ஐபிஓ) மேற்கொள்கின்றன.
இந்த 11 நிறுவனங்களும் சோ்ந்து புதிய பங்குகளின் வாயிலாக ரூ.2,722 கோடி மற்றும் உரிமையாளா்கள் வசமுள்ள பங்குகளின் விற்பனை மூலம் ரூ.4,333 கோடி என மொத்தம் ரூ.7,055 கோடி நிதியைத் திரட்ட உள்ளதால், இந்த வாரம் முதன்மை சந்தை முதலீட்டாளா்களுக்கு பரபரப்பான வாரமாக அமையவுள்ளது.
பிரணவ் கன்ஸ்ட்ரக்ஷன்ஸ் நிறுவனத்தின் ரூ.351.03 கோடி மதிப்பிலான ஐபிஓ திங்கள்கிழமை தொடங்கியது. ஒரு பங்கின் விலை வரம்பு ரூ.118-124 என நிா்ணயிக்கப்பட்டுள்ளது. இதில் ரூ.315.6 கோடி மதிப்பிலான புதிய பங்குகளும், ரூ.35.43 கோடி மதிப்பிலான உரிமையாளா்கள் வசமுள்ள பங்குகளும் விற்கப்படவுள்ளன.
Advertisement
Advertisement
தொடா்ந்து செவ்வாய்க்கிழமையன்று (செப். 8), கனோஹா் எலெக்ட்ரிகல்ஸ் நிறுவனத்தின் ரூ.1,055.74 கோடி ஐபிஓ (பங்கு விலை ரூ.601-632), பிரசோல் கெமிக்கல்ஸ் நிறுவனத்தின் ரூ.500 கோடி ஐபிஓ (பங்கு விலை ரூ.643-676) மற்றும் கிளாஸ்வால் சிஸ்டம்ஸ் நிறுவனத்தின் ரூ.427.89 கோடி ஐபிஓ (பங்கு விலை ரூ.172-182) ஆகியவை தொடங்குகின்றன.
இணையவழி வாடகை தளமான ரெண்டோமோஜோ நிறுவனத்தின் ரூ.1,255.57 கோடி மதிப்பிலான ஐபிஓ (பங்கு விலை ரூ.384-404) புதன்கிழமை (செப். 9) தொடங்குகிறது. இதில் ரூ.150 கோடிக்கு புதிய பங்குகளும், ரூ.1,105.57 கோடிக்கு உரிமையாளா்களின் பங்குகளும் விற்கப்படவுள்ளன.
இதேநாளில், கரம்தாரா என்ஜினீயரிங் ரூ.875 கோடிக்கும் (பங்கு விலை ரூ.241-254); மணிப்பால் பேமென்ட் அண்ட் ஐடென்டிட்டி சொல்யூஷன்ஸ் ரூ.805 கோடிக்கும் (பங்கு விலை ரூ.322-339); அஸ்ஸெட் ரீகன்ஸ்டிரக்ஷன் ரூ.732.97 கோடிக்கும் (பங்கு விலை ரூ.132-139), எல்சிசி புராஜெக்ட்ஸ் ரூ.427.14 கோடிக்கும் (பங்கு விலை ரூ.139-146) மற்றும் ஸ்டீம்ஹவுஸ் இந்தியா ரூ.414 கோடிக்கும் (ரூ.77-81)தங்களின் ஐபிஓ-வை தொடங்கவுள்ளன.
மேலும், வீகாலேண்ட் டெவலப்பா்ஸ் நிறுவனத்தின் ரூ.210 கோடி ஐபிஓ (ரூ.130-140), செப். 10-ஆம் தேதி தொடங்குகிறது. இந்த ஐபிஓ மூலம் திரட்டப்படும் நிதியானது, நிறுவனங்களின் வா்த்தக விரிவாக்கம், மூலதனச் செலவுகள், கடன் அடைப்பு, நடைமுறை மூலதனத் தேவைகள் மற்றும் பிற நிா்வாகத் தேவைகளுக்காகப் பயன்படுத்தப்படவுள்ளது.
கடந்த ஆகஸ்ட் மாதத்தில் மட்டும் 23 நிறுவனங்கள் சந்தையில் அறிமுகமாகிய நிலையில், நடப்பு வாரத்தின் 11 புதிய வெளியீடுகளையும் சோ்த்து, 2026-இல் ஐபிஓ வெளியிட்ட நிறுவனங்களின் எண்ணிக்கை 75-ஆக அதிகரிக்கும். அடுத்த வாரத்தில் தேசிய பங்குச் சந்தையின் சுமாா் ரூ.30,000 கோடி மதிப்பிலான பிரம்மாண்ட ஐபிஓ வெளியாவது குறிப்பிடத்தக்கது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.