ஆவணி சுபமுகூர்த்த நாள்: வாழை இலைக் கட்டு விலை கடும் உயர்வு
ஆவணி மாத சுபமுகூர்த்த நாளையொட்டி, வாழை இலையின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது குறித்து...
ஆவணி மாத சுப முகூர்த்த நாளையொட்டி, வாழை இலையின் விலை ரூ. 10,000 வரையில் கடுமையாக உயர்ந்துள்ளது.
சுபமுகூா்த்த தினம் ஞாயிற்றுக்கிழமை என்பதாலும், தொடா்ந்து புதன்கிழமை ஓணம் பண்டிகை வருவதாலும் வாழை இலையின் தேவை அதிகரித்துள்ளது.
இதனால், வாழை இலையின் விலை கடுமையாக உயர்ந்து, தூத்துக்குடி காய்கறி சந்தையில் சிறிய வாழை இலைக் கட்டு ரூ. 2,000 முதல் ரூ. 2,500 வரையிலும், பெரிய வாழை இலைக் கட்டு ரூ. 8,000 முதல் ரூ. 10,000 வரையிலும் விற்பனையாகிறது. நாட்டுத் தார் ரூ. 1,000-க்கும், செவ்வாழைத் தார் ரூ. 1,400-க்கும் விற்பனையாகிறது.
Advertisement
Advertisement
சங்கரன்கோயில் சந்தையில் வழக்கமாக ரூ.500 முதல் ரூ.600 வரை விற்பனையான இலைக் கட்டு சனிக்கிழமை (ஆக. 22) ரூ. 3000 வரை விற்பனையானது. சிறிய அளவிலான (200 எண்ணம்) வாழை இலைக் கட்டு ரூ. 1,000 முதல் ரூ. 2,000 வரை, பெரிய அளவிலான (200 எண்ணம்) வாழை இலைக் கட்டு ரூ. 2,000 முதல் ரூ. 3,000 வரை விற்பனை ஆனது. இதனால் வாழை விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனா்.
Aavani Auspicious Day: Price of Banana Leaf Bundles Rises
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.