உலக சுற்றுச்சூழல் தின விழிப்புணர்வுப் பேரணி
திருப்பூர் சிக்கண்ணா அரசு கலைக் கல்லூரி நாட்டு நலப்பணித் திட்டம் அலகு-2 சார்பில் உலக சுற்றுச் சூழல் தின விழிப்புணர்வு பேரணி புதன்கிழமை நடைபெற்றது.
திருப்பூர் சிக்கண்ணா அரசு கலைக் கல்லூரி நாட்டு நலப்பணித் திட்டம் அலகு-2 சார்பில் உலக சுற்றுச் சூழல் தின விழிப்புணர்வு பேரணி புதன்கிழமை நடைபெற்றது.
தூய்மை இந்தியா கோடைக் கால 100 மணிநேரம் பயிற்சி முகாமின் ஒரு பகுதியாக அவிநாசி கருமாபாளையத்தில் நடைபெற்ற இந்த பேரணி நடைபெற்றது. கருமாபாளையம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் தொடங்கியப் பேரணி, அம்பேத்கர் நகர், எஸ்.பி. கார்டன், ஈப்பன் காலனி, சேவூர் சாலை வழியாக சென்று மீண்டும் பள்ளியில் நிறைவடைந்தது.
பள்ளி தலைமை ஆசிரியை காந்திமதி, சேயூர் ரோட்டரி சங்க முன்னாள் தலைவர் சண்முகசுந்தரம், சத்திவேல் ஆகியோர் கொடியசைத்து பேரணியைத் துவக்கிவைத்தனர்.
இதில் சுற்றுப்புறத் தூய்மை, பிளாஸ்டிக் பயன்பாட்டை தவிர்ப்பது உள்ளிட்ட விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியும், விலங்குகள், மரங்கள் படங்கள் கொண்ட முகமூடிகளை அணிந்தும் மாணவர்கள் பேரணியில் பங்கேற்றனர்.
மேலும், மாணவர்களுக்கு கட்டுரை, பேச்சு, ஓவியம் ஆகிய போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டன. இதைத் தொடர்ந்து சுற்றுச்சூழலைக் காப்போம் என பள்ளி மாணவர்கள் உறுதிமொழி ஏற்றனர். இம்முகாமை தூய்மை இந்தியா ஒருங்கிணைப்பு அலுவலர் மோகன்குமார், மாணவர்கள் திட்டத் தலைவர் பிரபுதாஸ் ஆகியோர் ஒருங்கிணைத்தனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.