கணவரின் குடிப் பழக்கத்தால் மனைவி தீக்குளித்து தற்கொலை
கணவர் குடிப் பழக்கத்தை விட மறுத்ததால், மனைவி தீக்குளித்து திங்கள்கிழமை தற்கொலை செய்து கொண்டார்.
கணவர் குடிப் பழக்கத்தை விட மறுத்ததால், மனைவி தீக்குளித்து திங்கள்கிழமை தற்கொலை செய்து கொண்டார்.
திருப்பூர், ராக்கியாபாளையம் பிரிவு பள்ளக்காட்டுப்புதூரைச் சேர்ந்தவர் பிரபாகரன். இவரது மனைவி சுகுணா (22). இவர்களுக்கு 3 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. பிரபாகரன் மதுவுக்கு அடிமையானதால், குடும்பத்தில் அடிக்கடி தகாரறு ஏற்பட்டுள்ளது.
கடந்த 19ஆம் தேதி குடிப் பழக்கத்தை கைவிடுமாறு கணவரிடம் சுகுணா கூறியுள்ளார். அதற்கு அவர் மறுத்ததாகத் தெரிகிறது. இதையடுத்து மண்ணெண்ணையை எடுத்து தன் உடல் மீது ஊற்றிக் கொண்டு சுகுணா தீ வைத்துக் கொண்டார். இதில் படுகாயமடைந்த அவர் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.
இந்நிலையில் திங்கள்கிழமை காலை சுகுணா உயிரிழந்தார். இதுகுறித்த திருப்பூர் ரூரல் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனர். திருமணம் ஆகி 3 ஆண்டுகளே ஆவதால் வருவாய் கோட்டாட்சியரும் விசாரிக்கிறார்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.