FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருப்பூர்

பொதுத் தேர்வு: திருப்பூர் விகாஸ் வித்யாலயா சிறப்பிடம்

திருப்பூர், கூலிபாளையத்தில் இயங்கும் விகாஸ் வித்யாலயா பள்ளி பிளஸ் 2, மற்றும் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் அதிகமான மாணவர்களை தேர்ச்சிபெற வைத்து சிறப்பிடம் பெற்றுள்ளது.

Updated On : 25 மே 2018, 12:44 am IST
பகிர்:

திருப்பூர், கூலிபாளையத்தில் இயங்கும் விகாஸ் வித்யாலயா பள்ளி பிளஸ் 2, மற்றும் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் அதிகமான மாணவர்களை தேர்ச்சிபெற வைத்து சிறப்பிடம் பெற்றுள்ளது.
பிளஸ் 2 தேர்வில் இந்தப் பள்ளியில் ஒரு மாணவி 1,186 மதிப்பெண் பெற்றுள்ளார். அதேபோல் பத்தாம் வகுப்புத் தேர்வில் மற்றொரு மாணவி 493 மதிப்பெண்கள் பெற்றுள்ளார். இந்தப் பள்ளியில் ஏராளமான மாணவ, மாணவிகள் பிளஸ் 2 தேர்விலும், பத்தாம் வகுப்புத் தேர்விலும் 95 சதவீத மதிப்பெண்களுக்கு மேல் பெற்று தேர்ச்சி பெற்றுள்ளனர்.
வெற்றி பெற்ற மாணவர்களையும், அதற்கு காரணமான ஆசிரியர்களையும் பள்ளியின் தலைவர் ஆண்டவர் ராமசாமி பரிசளித்துப் பாராட்டியுள்ளர். நிகழ்ச்சியில், பள்ளியின் நிர்வாக அதிகாரி குருசாமி, பொருளாளர் ராதா ராமசாமி, முதல்வர் அனிதா, துணை முதல்வர் தவச்செல்வி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments