FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

உடுமலை பள்ளிகளில் ஆசிரியர் தின விழா

உடுமலை வட்டத்தில் உள்ள பல்வேறு பள்ளியில் ஆசிரியர் தின விழா புதன்கிழமை  கொண்டாடப்பட்டது.

30 ஜனவரி 2024, 10:11 pm IST
பகிர்:

உடுமலை வட்டத்தில் உள்ள பல்வேறு பள்ளியில் ஆசிரியர் தின விழா புதன்கிழமை  கொண்டாடப்பட்டது.
வித்யநேத்ரா பள்ளி: தாளாளர் பி.எஸ்.சார்லஸ் பாபு தலைமை வகித்தார். முதல்வர் கோபாலகிருஷ்ணன் முன்னிலை வகித்தார். இதையொட்டி குடியரசு முன்னாள் தலைவர் டாக்டர் ராதாகிருஷ்ணன் உருவப் படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. ஆசிரியர்களுக்கு நினைவுப் பரிசுகளும் வழங்கப்பட்டன. துணை முதல்வர் எஸ்.வளர்மதி பேசினார். பள்ளி அறங்காவலர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
தேஜஸ் ரோட்டரி: உடுமலை தேஜஸ் ரோட்டரி சங்கம் சார்பில் நகராட்சி விரிவாக்கப் பள்ளியில் ஆசிரியர் தின விழா நடைபெற்றது. திருமூர்த்திமலை ஆசிரியர் பயிற்சிப் பள்ளி முதல்வர் சேகர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்துகொண்டு பேசினார். மருத்துவர் சுந்தரராஜன், தேஜஸ் ரோட்டரி சங்க உறுப்பினர்கள் கலந்துகொண்டனர். செயலாளர் பாலமுருகன் நன்றி கூறினார்.
எஸ்கேபி பள்ளி: உடுமலை, எஸ்கேபி மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற ஆசிரியர் தின விழாவுக்கு செயலர் கே.ஆர்.கே.ராதாகிருஷ்ணன் தலைமை வகித்தார். தலைமை ஆசிரியர் கே.டி.பூரணி முன்னிலை வகித்தார். இதையொட்டி மாணவ, மாணவிகளே நடத்திய பட்டிமன்றம் மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. 
ஆதர்ஷ் பள்ளி: உடுமலையை அடுத்துள்ள பள்ளபாளையம் ஆதர்ஷ் மெட்ரிக். மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற ஆசிரியர் தின விழாவுக்கு தலைமை ஆசிரியர் ஜீ.ஜீவராஜ் அலெக்ஸாண்டர் தலைமை வகித்தார்.  
பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகள் நடப்பட்டன. பள்ளித் தலைவர் பி.எம்.பாலசுப்பிரமணியம், செயலர் டாக்டர் கே.பாலசுந்தரம் மற்றும் இயக்குநர்கள் இதில் கலந்து கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments