துப்பாக்கி சுடுதலில் வெள்ளிப் பதக்கம்: என்சிசி பேராசிரியருக்கு பாராட்டு
அகில இந்திய அளவிலான துப்பாக்கி சுடுதல் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற என்சிசி பேராசிரியரைப் பாராட்டும் நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.
அகில இந்திய அளவிலான துப்பாக்கி சுடுதல் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற என்சிசி பேராசிரியரைப் பாராட்டும் நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.
தேசிய மாணவர் படையினருக்கான புத்தாக்கப் பயிற்சி முகாம் மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள குவாலியரில் நடை பெற்றது.
இம் முகாமில் அகில இந்திய அளவிலான துப்பாக்கி சுடுதல் போட்டி நடந்தது. இதில் மொத்தம் 107 போட்டியாளர்கள் பங்கேற்றனர்.
இப்போட்டியில், உடுமலை ஜிவிஜி விசாலாட்சி மகளிர் கல்லூரியின் தேசிய மாணவர் படைப் பிரிவு சார்பில் கலந்துகொண்ட பேராசிரியர் பி.கற்பகவல்லி அகில இந்திய அளவில் இரண்டாம் இடம் பெற்று வெள்ளிப் பதக்கத்தை வென்றார்.
இதையொட்டி, கல்லூரி வளாகத்தில் கற்பகவல்லியைப் பாராட்டும் நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது. இதில் கல்லூரித் தாளாளர் கெ.ரவீந்திரன், முதல்வர் எஸ். கலைச்செல்வி, பேராசிரியர்கள் கலந்துகொண்டு கற்பகவல்லியைப் பாராட்டினர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.