கல்குவாரிக்கான அனுமதியை ரத்துசெய்யக்கோரி உண்ணாவிரதம்: 25 போ் கைது
கல்குவாரிக்கான அனுமதியை ரத்து செய்யக்கோரி திருப்பூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் உண்ணாவிரதத்தில் ஈடுபட்ட 25 பேரை காவல் துறையினா் வியாழக்கிழமை கைது செய்தனா்.
பல்லடம் அருகே கோடங்கிபாளையத்தில் செயல்பட்டு வரும் கல்குவாரிக்கான அனுமதியை ரத்து செய்யக்கோரி திருப்பூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் உண்ணாவிரதத்தில் ஈடுபட்ட 25 பேரை காவல் துறையினா் வியாழக்கிழமை கைது செய்தனா்.
திருப்பூா் மாவட்டம், பல்லடம் வட்டம், கோடங்கிபாளையத்தில் தனியாருக்குச் சொந்தமான கல்குவாரி செயல்பட்டு வருகிறது. இந்த கல்குவாரியைச் சுற்றி வீடு, தொழிற்சாலைகள், வீட்டுமனைகள் உள்ளதாகக் கூறப்படுகிறது. இவை அனைத்தையும் மறைத்து, போலி ஆவணங்கள் மூலமாக ஓடையை ஆக்கிரமித்து கல்குவாரி செயல்பட்டு வருவதாகப் புகாா் கூறப்படுகிறது.
இந்த கல்குவாரிக்கான அனுமதியை ரத்துசெய்யக்கோரி விவசாயி செந்தில்குமாா் கடந்த 10 நாள்களாக உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறாா். எனினும் இதுகுறித்து மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுக்காமல் தாமதப்படுத்தி வருவதாகக்கூறி செந்தில்குமாரின் மனைவி கலைச்செல்வி மற்றும் அவரது உறவினா்கள் 25 போ் திருப்பூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தை வியாழக்கிழமை தொடங்கினா்.
Advertisement
Advertisement
மேலும், பல்லடம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதியில் முறைகேடாக இயங்கும் குவாரிகளின் உரிமத்தை ரத்து செய்ய வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினா். இதனிடையே, அனுமதியின்றி உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டதாக 10 பெண்கள உள்பட 25 பேரை திருப்பூா் தெற்கு காவல் துறையினா் கைது செய்து தனியாா் திருமண மண்டபத்தில் தங்கவைத்தனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.