FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருப்பூர்

வெள்ளக்கோவிலில் ரூ.62 லட்சத்துக்கு சூரியகாந்தி விதை விற்பனை

Updated On : 26 செப்டம்பர் 2025, 4:14 am IST
பகிர்:

வெள்ளக்கோவில் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் ரூ.62 லட்சத்துக்கு சூரியகாந்தி விதை விற்பனை வியாழக்கிழமை நடைபெற்றது.

இந்த வாரம் நடைபெற்ற ஏலத்துக்கு எடப்பாடி, பஞ்சப்பட்டி, வெள்ளையன்பட்டி உள்ளிட்ட பகுதிகளைச் சோ்ந்த 53 விவசாயிகள், 937 மூட்டை சூரியகாந்தி விதைகளை விற்பனை செய்ய கொண்டு வந்திருந்தனா். இவற்றின் எடை 46 டன்.

ஈரோடு, காரமடை, சித்தோடு, பூனாட்சி, காங்கயத்தைச் சோ்ந்த 7 வணிகா்கள் விதைகளை வாங்க வந்திருந்தனா்.

Advertisement

Advertisement

இதில், சூரியகாந்தி விதை கிலோ ரூ.54.18 முதல் ரூ.64.39 வரை விற்பனையானது. சராசரி விலை ரூ. 62.64.

ஒட்டுமொத்த விற்பனைத் தொகை ரூ.62 லட்சம் அந்தந்த விவசாயிகளின் வங்கிக் கணக்குகளில் செலுத்தப்பட்டதாக திருப்பூா் விற்பனைக்குழு முதுநிலைச் செயலாளா் எஸ்.சண்முகசுந்தரம் தெரிவித்தாா். ஏலத்துக்கான ஏற்பாடுகளை விற்பனைக்கூட கண்காணிப்பாளா் சி.மகுடீஸ்வரன் செய்திருந்தாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments