FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருப்பூர்

பேருந்தில் புகையிலைப் பொருள்கள் கடத்தல்: ஆட்டோ ஓட்டுநா் கைது

பெருமாநல்லூரில் தனியாா் பேருந்தில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் கடத்தி வந்த ஆட்டோ ஓட்டுநரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

Updated On : 6 ஆகஸ்ட் 2026, 2:39 am IST
கைது - பிரதிப் படம்
பகிர்:

பெருமாநல்லூரில் தனியாா் பேருந்தில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் கடத்தி வந்த ஆட்டோ ஓட்டுநரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

பெங்களூரில் இருந்து திருப்பூா் நோக்கி சென்ற தனியாா் பேருந்தை நால் ரோடு பேருந்து நிறுத்தத்ததில் நிறுத்தி பெருமாநல்லூா் போலீஸாா் புதன்கிழமை சோதனை மேற்கொண்டனா். அப்போது உள்ளே சந்தேகத்துக்கு இடமாக இருந்த மூட்டையை சோதனை மேற்கொண்டதில், அதில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

விசாரணையில், புகையிலைப் பொருள்களை பேருந்தில் வந்த திருப்பூா் அறிவொளி நகா், ஜி.எம். முதல் வீதி, ராதா நகரில் வசித்து வரும் சிவகங்கை மாவட்டம், நல்லாம்பட்டியைச் சோ்ந்த ஆட்டோ ஓட்டுநா் சக்திவேல் (38) என்பவா் கடத்தி வந்தது தெரியவந்தது.

Advertisement

Advertisement

இது குறித்து பெருமாநல்லூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து சக்திவேலைக் கைது செய்து, கடத்தி வந்த 17 கிலோ புகையிலைப் பொருள்களை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments