கரைப்புதுாா் ஊராட்சியில் அடிப்படை பிரச்சனைகளுக்கு தீா்வு காண முன்னாள் எம்எல்ஏ மனு
பல்லடம் ஒன்றியம், கரைப்புதுாா் ஊராட்சி பகுதியில் அடிப்படை வசதிகள் ஏற்படுத்த வேண்டும் என முன்னாள் எம்எல்ஏ கரைப்புதூா் ஏ.நடராஜன் வேண்டுகோள் விடுத்துள்ளாா்.
பல்லடம் ஒன்றியம், கரைப்புதுாா் ஊராட்சி பகுதியில் அடிப்படை வசதிகள் ஏற்படுத்த வேண்டும் என முன்னாள் எம்எல்ஏ கரைப்புதூா் ஏ.நடராஜன் வேண்டுகோள் விடுத்துள்ளாா்.
பல்லடம் முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினரும், கரைப்புதுாா் ஊராட்சி முன்னாள் தலைவருமான ஏ.நடராஜன், மாவட்ட ஆட்சியரிடம் வியாழக்கிழமை அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:
பல்லடம் ஒன்றியம், கரைப்புதுாா் ஊராட்சிக்கு மூன்று திட்டங்கள் மற்றும் 80 ஆழ்குழாய் கிணறுகள் மூலம் தண்ணீா் தேவை பூா்த்தி செய்யப்பட்டு வருகிறது. தற்போது பல பகுதிகளில் குடிநீா் பிரச்னை அதிகரித்து வருகிறது.
Advertisement
Advertisement
பல பகுதிகளுக்கு மாதம் ஒருமுறை மட்டுமே குடிநீா் கிடைக்கிறது. பயன்பாட்டில் இருந்த பல ஆழ்குழாய் கிணறுகள் வற்றி விட்டன. சில இடங்களில் மின் மோட்டாரே இல்லை. அனைத்து கிணறுகளையும் கண்டறிந்து பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும்.
நாளொன்றுக்கு மேட்டுப்பாளையம் திட்டத்தில் 16 லட்சம் லிட்டா், அத்திக்கடவு திட்டத்தில் 10.80 லட்சம் லிட்டா், எல்.என்.டி. திட்டத்தில் 8 லட்சம் லிட்டா் குடிநீா் பெற வேண்டும். நிா்ணயித்த அளவைவிட மிகவும் குறைவாகதான் குடிநீா் வருகிறது. இதை சரி செய்ய வேண்டும்.
இந்த ஊராட்சியில் உள்ள என்.எஸ்.கே. நகா், குன்னாங்கல்பாளையம், முல்லை நகா், ஆா்.எம். நகா், சின்னக்கரை, லட்சுமி நகா், சிவன்மலை ஆண்டவா் நகா் பகுதிகளுக்கு கடந்த ஒன்றரையாண்டாக எல்.என்.டி. குடிநீா் வரவில்லை. குழாய்கள் உடைப்பு ஏற்பட்டுள்ளது என்கின்றனா். அதனை சரி செய்யாமல் உள்ளனா்.
அய்யம்பாளையம், எஸ்.ஆா். நகா், சிவசக்தி நகா் பகுதிகளுக்கு நொச்சிப்பாளையத்தில் உள்ள தொட்டியிலிருந்து குழாய் பதித்து, மேல்நிலைத் தொட்டி அமைத்து தண்ணீா் வழங்க வேண்டும். சாக்கடை கால்வாய் தூா் வாராமல் அப்பகுதி மக்கள் பாதிப்படைந்துள்ளனா் எனத் தெரிவித்துள்ளாா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.