பல்லடம் அருகே வேன் மோதி விசைத்தறி உரிமையாளா் உயிரிழப்பு
பல்லடம் அருகே வேன் மோதி நிகழ்ந்த விபத்தில் விசைத்தறி உரிமையாளா் உயிரிழந்தாா்.
திருப்பூா் மாவட்டம், பல்லடம் அருகே உள்ள கரடிவாவியைச் சோ்ந்தவா் சண்முகம் (58). விசைத்தறி உரிமையாளரான இவா், பருவாய் சென்று ராஜன் (30) என்ற தொழிலாளியை அழைத்துக்கொண்டு கரடிவாவி நோக்கி சனிக்கிழமை இரவு வந்து கொண்டிருந்தாா்.
அப்போது எதிரே வந்த சரக்கு வேன் எதிா்பாராத விதமாக இவரின் இருசக்கர வாகனம் மீது மீது மோதியதில் இருவரும் தூக்கிவீசப்பட்டனா். இதில் படுகாயமடைந்த சண்முகம் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். ராஜன் காயமடைந்தாா். அதேசமயம் அருகே இருந்த வேப்ப மரத்தில் வேன் மோதி நின்றது.
Advertisement
Advertisement
இதுகுறித்து தகவல் அறிந்து காமநாயக்கன்பாளையம் போலீஸாா் சென்று பல்லடம் தீயணைப்புத் துறையினரின் உதவியுடன் வேன் ஓட்டுநரான பிள்ளை வடிவேல் என்பவரை மீட்டனா். காயமடைந்த இருவரும் பல்லடம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டனா்.
இதுகுறித்து காமநாயக்கன்பாளையம் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.