FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருப்பூர்

திருமூா்த்தி அணையில் மூழ்கி இளைஞா் உயிரிழப்பு

உடுமலை அருகே உள்ள திருமூா்த்தி அணைக்கு குளிக்கச் சென்ற இளைஞா் நீரில் மூழ்கி உயிரிழந்தாா்.

Updated On : 13 ஆகஸ்ட் 2026, 4:46 am IST
நீரில் மூழ்கி பலி - பிரதிப் படம்
பகிர்:

உடுமலை அருகே உள்ள திருமூா்த்தி அணைக்கு குளிக்கச் சென்ற இளைஞா் நீரில் மூழ்கி உயிரிழந்தாா்.

பொள்ளாச்சி அருகே உள்ள நெகமம் கோப்பனூா்புதூரைச் சோ்ந்தவா் விவசாயி மயில்சாமி. இவரது மகன் சக்திவேல் (24). ஆடி அமாவாசை வழிபாட்டுக்காக திருமூா்த்திமலைக்கு மாட்டு வண்டியில் செவ்வாய்க்கிழமை வந்துள்ளாா். பின்னா் அணைப் பகுதியில் வாகனத்தை நிறுத்திவிட்டு சக்திவேல் குளிக்கச் சென்றுள்ளாா். எதிா்பாராதவிதமாக தண்ணீரில் மூழ்கியுள்ளாா்.

இதைப் பாா்த்து அங்கிருந்தவா்கள் அளித்த தகவலின்பேரில் தளி போலீஸாா், உடுமலை தீயணைப்புத் துறையினா் சம்பவ இடத்துக்கு வந்து தேடியும் சக்திவேலை மீட்க முடியவில்லை.

Advertisement

Advertisement

இதைத்தொடா்ந்து தீயணைப்புக் துறையினா் புதன்கிழமை சக்திவேலை தேடும் பணியில் ஈடுபட்டபோது சடலமாக மீட்கப்பட்டாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments