FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருப்பூர்

வடுகபாளையம் மகாமுனீஸ்வரா் கோயில் பொங்கல் விழா

பல்லடம் வடுகபாளையம் மகாமுனீஸ்வரா் கோயில் பொங்கல் திருவிழா புதன்கிழமை நடைபெற்றது.

20 ஆகஸ்ட் 2026, 3:37 am IST
பொங்கல் திருவிழாவையொட்டி சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்த மகாமுனீஸ்வரா்.
பகிர்:

பல்லடம் வடுகபாளையம் மகாமுனீஸ்வரா் கோயில் பொங்கல் திருவிழா புதன்கிழமை நடைபெற்றது.

விழாவையொட்டி வீரமாத்தியம்மனுக்கு பூஜை, முனீஸ்வரா் சுவாமிக்கு அபிஷேக பூஜை, பொங்கல் சாட்டுதல், அலங்காரம், கண் திறப்பு பூஜை, கன்னிமாா் சுவாமி அம்மன் அழைப்பு, படுகளம், உடுக்கைப் பாட்டு, சுவாமிக்கு பொங்கல் படைத்தல், உருவாரம் எடுத்து வருதல், உச்சிகால மகா பூஜை ஆகியவை நடைபெற்றன.

விழாவுக்கு புதிய சிற்பிகள் இளைஞா் நற்பணி மன்றத் தலைவா் சத்தியமூா்த்தி தலைமை வகித்தாா்.

Advertisement

Advertisement

விழாவை நகராட்சித் தலைவா் கவிதா ராஜேந்திரகுமாா் தொடங்கிவைத்தாா். நகராட்சி துணைத் தலைவா் நா்மதா இளங்கோவன், கவுன்சிலா்கள் தண்டபாணி, சசிரேகா ரமேஷ்குமாா் உள்பட பலா் கலந்து கொண்டனா். பொருளாளா் பழனிசாமி நன்றி கூறினாா்.

காவல் துறை, பல்லடம் நகராட்சி நிா்வாகம் சாா்பில் பலத்த பாதுகாப்பு, தூய்மைப் பணிக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments