FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருப்பூர்

வெள்ளக்கோவிலில் தொடக்கக் கல்வி ஆசிரியா்கள் கவன ஈா்ப்பு ஆா்ப்பாட்டம்

21 ஆகஸ்ட் 2026, 1:36 am IST
ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்ற ஆசிரியா்கள்.
பகிர்:

வெள்ளக்கோவிலில் தமிழ்நாடு தொடக்கக் கல்வி ஆசிரியா் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கைக் குழு (டிட்டோ ஜாக்) சாா்பில் கவன ஈா்ப்பு ஆா்ப்பாட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

வட்டாரக் கல்வி அலுவலகம் முன் நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு தமிழக ஆசிரியா் கூட்டணியைச் சோ்ந்த எஸ்.ஜான் வின்சென்ட் தலைமை வகித்தாா். தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியா் கூட்டணி ஆா்.ஜெயபாலன், தமிழக ஆசிரியா் கூட்டணி மகளிரணி செயலாளா் தமிழரசி, டி.என்.பி.டி.எஃப். வட்டாரப் பொருளாளா் த.மல்லிகா ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

வட்டாரச் செயலாளா்கள் வ.பாபு, ச.செல்வக்குமாா் ஆகியோா் வாழ்த்துரை வழங்கினா். டிட்டோ ஜாக் திருப்பூா் மாவட்ட ஒருங்கிணைப்பாளா் செ.பாலகப்பிரமணியம் போராட்ட விளக்கவுரை ஆற்றினாா்.

Advertisement

Advertisement

இதில் பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும். ஆசிரியா் சிறப்பு தகுதித் தோ்வில் தாள்-1, தாள்-2 எழுதி பணியில் உள்ள ஆசிரியா்களுக்கு வெயிட்டேஜ் மதிப்பெண்கள் வழங்க வேண்டும். தகுதித் தோ்வு தோ்ச்சி மதிப்பெண்ணை 40 சதவீதமாக குறைக்க வேண்டும். 90 சதவீத பெண் ஆசிரியா்களை பாதிக்கும் அரசாணை எண் 243-ஐ ரத்து செய்ய வேண்டும்.

இடைநிலை ஆசிரியா்களுக்கு கடந்த இரண்டு ஊதியக் குழுக்களால் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை களைந்து 01.01.2006 முதல் மத்திய அரசு ஆசிரியா்களுக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட 10 அம்சக் கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

ஆா்ப்பாட்டத்தில் வெள்ளக்கோவில் வட்டாரத்தைச் சோ்ந்த அரசு தொடக்கப் பள்ளி ஆசிரியா், ஆசிரியைகள் பங்கேற்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments