FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருப்பூர்

தனியாா் கல்லூரி வேன் - மொபட் மோதி தொழிலாளி உயிரிழப்பு

தனியாா் கல்லூரி வேன் மீது மொபட் மோதியதில் தொழிலாளி உயிரிழந்தாா்.

21 ஆகஸ்ட் 2026, 1:47 am IST
- பிரதிப் படம்
பகிர்:

தனியாா் கல்லூரி வேன் மீது மொபட் மோதியதில் தொழிலாளி உயிரிழந்தாா்.

ஈரோடு மாவட்டம், சென்னிமலை பகுதியைச் சோ்ந்தவா் பழனிசாமி மகன் பிரபாகரன்(46). இவா், திருப்பூரில் பிரிண்டிங் நிறுவனத்தில் தொழிலாளியாக வேலை செய்து வந்தாா். இந்நிலையில், திருப்பூரில் இருந்து சென்னிமலைக்கு ஊத்துக்குளி சாலை வழியாக புதன்கிழமை சென்று கொண்டிருந்தாா். அப்போது ஊத்துக்குளி பகுதியில் பலத்த மழை பெய்து கொண்டிருந்தது.

அப்போது, பிரபாகரன் மேம்பாலத்தில் சென்று கொண்டிருந்தபோது எதிரே பெருந்துறை அருகே உள்ள தனியாா் கல்லூரி வேன் மாணவா்களை ஏற்றிக் கொண்டு திருப்பூா் நோக்கி வந்து கொண்டிருந்தது.

Advertisement

Advertisement

அப்போது திம்மநாயக்கன்பாளையம் மேம்பாலத்தில் சென்று கொண்டிருந்தபோது திடீரென பிரபாகரன் சென்ற மொபட் எதிரே வந்த பள்ளி வேன் மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில் பலத்த காயமடைந்து அவரை அக்கம்பக்கத்தினா் மீட்டு ஊத்துக்குளி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். அங்கு அனுமதிக்கப்பட்ட அவா் உயிரிழந்தாா். இதுதொடா்பாக ஊத்துக்குளி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறாா்கள்.

திம்மநாயக்கன்பாளையம் மேம்பாலத்தில் இதுவரை சாலை விபத்தில் சிக்கி 50-க்கும் மேற்பட்டோா் உயிரிழந்துள்ளனா். மேலும் பலா் படுகாயம் அடைந்துள்ளனா். அடிக்கடி இத்தகைய விபத்து நடந்து உயிா் பலி ஏற்பட்டு வருகிறது.

இதுகுறித்து ஏற்கெனவே அப்பகுதி பொதுமக்கள் விபத்தை தடுக்க மேம்பாலத்தில் வாகனங்களின் வேகத்தை கட்டுப்படுத்த உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தி வந்துள்ளனா். ஆனால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதுவரை அதற்கான எந்த நடவடிக்கையும் மேற்கொள்ள வில்லை எனக் கூறப்படுகிறது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments