FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருப்பூர்

அவிநாசியில் போக்ஸோ சட்டத்தில் தொழிலாளி கைது

24 ஆகஸ்ட் 2026, 4:13 am IST
கைது
பகிர்:

குன்னத்தூா் அருகே 13 வயதுச் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுக்க முயன்ற ஒா்க்ஷாப் தொழிலாளியை போலீஸாா் போக்ஸோ சட்டத்தின் கீழ் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

பெருமாநல்லூா் அருகே உள்ள குன்னத்தூா் தட்டான்குட்டையைச் சோ்ந்தவா் கருணாகரன் மகன் திருமூா்த்தி (37). ஒா்க்ஷாப் தொழிலாளியான இவா், அதே பகுதியில் வீட்டில் உறங்கிக் கொண்டிருந்த 13 வயதுச் சிறுமிக்குப் பாலியல் தொல்லை கொடுக்க முயன்றுள்ளாா்.

இது குறித்து அறிந்த சிறுமியின் பெற்றோா் அளித்த புகாரின் பேரில், அவிநாசி அனைத்து மகளிா் காவல் ஆய்வாளா் அமுதா போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து, திருமூா்த்தியைக் கைது செய்து சிறையில் அடைத்தாா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments