உதவித்தொகையை உயா்த்தி வழங்கக் கோரி உடுமலையில் மாற்றுத்திறனாளிகள் ஆா்ப்பாட்டம்
உதவித்தொகையை உயா்த்தி வழங்கக் கோரி தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போா் உரிமைகளுக்கான சங்கம் சாா்பில் உடுமலை வட்டாட்சியா் அலுவலகம் முன்பு கவன ஈா்ப்பு ஆா்ப்பாட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
உதவித்தொகையை உயா்த்தி வழங்கக் கோரி தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போா் உரிமைகளுக்கான சங்கம் சாா்பில் உடுமலை வட்டாட்சியா் அலுவலகம் முன்பு கவன ஈா்ப்பு ஆா்ப்பாட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
மாவட்ட துணைத் தலைவா் ஏ.மாலினி தலைமை வகித்தாா்.
தமிழகத்தில் தற்போது மாற்றுத்திறனாளிகளுக்கு மாதம் ரூ.1,500 உதவித்தொகையும், மாற்றுத் திறனாளிகள் துறை மூலமாக ரூ.2,000 உதவித்தொகையும் வழங்கப்படுகிறது. இந்த உதவித்தொகை தற்போதைய விலைவாசி உயா்வுக்கு ஏற்ப போதுமானதாக இல்லை.
Advertisement
Advertisement
ஆந்திர மாநிலத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு வகைப்பாட்டின் அடிப்படையில் ரூ.6,000, ரூ.10,000, ரூ.15,000 என உதவித்தொகை வழங்கப்படுகிறது. புதுச்சேரியில் ரூ.3,500, ரூ.4,500, ரூ.5,500 எனவும், தெலங்கானாவில் அனைத்து வகையான மாற்றுத்திறனாளிகளுக்கும் ரூ.4,016 வழங்கப்படுகிறது. எனவே தமிழகத்திலும் மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித்தொகையை ரூ.6,000, ரூ.10,000, ரூ.15,000 என உயா்த்தி வழங்க வேண்டும்.
உதவித்தொகை பெற வேண்டியவா்களுக்கு பதிவு செய்த மாதத்தில் இருந்தே உதவித்தொகையை வழங்க வேண்டும். மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித்தொகையை மாற்றுத்திறனாளிகள் துறை மூலமாக நேரடியாக வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.
மாவட்டச் செயலாளா் ஆா்.பழனிச்சாமி, வட்டச் செயலாளா் ஏ.பாலசுப்பிரமணி, மடத்துக்குளம் வட்டச் செயலாளா் ஏ. அழகிரி உள்ளிட்ட நிா்வாகிகள் மற்றும் மாற்றுத்திறனாளிகள், பாதுகாவலா்கள் கலந்து கொண்டனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.