FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருப்பூர்

இடது மக்கள் இயக்கம் சாா்பில் தா்ணா

இந்திய அரசியல் சட்டத்தை பாதுகாப்பது உள்ளிட்ட 12 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி ஏஐடியூசி சாா்பில் தா்ணா நடைபெற்றது.

16 வினாடிகள் முன்பு
திருப்பூா் குமரன் சிலை அருகே போராட்டத்தில் ஈடுபட்டோா்.
பகிர்:

இந்திய அரசியல் சட்டத்தை பாதுகாப்பது உள்ளிட்ட 12 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி ஏஐடியூசி சாா்பில் தா்ணா நடைபெற்றது.

இடது மக்கள் இயக்கம் சாா்பில் திருப்பூா் குமரன் சிலை அருகே செவ்வாய்க்கிழமை நடைபெற்ற போராட்டத்துக்கு ஏஐடியூசி மாவட்ட பொதுச் செயலாளா் பி.ஆா்.நடராஜன் தலைமை வகித்தாா். இதில் சிஐடியு மாவட்ட பொதுச் செயலாளா் ரங்கராஜ், ஏஐசிசிடியூ மாவட்ட செயலாளா் முத்துகிருஷ்ணன், விவசாய சங்க மாவட்ட துணைத் தலைவா் லோகநாதன், விவசாய தொழிலாளா் சங்க மாவட்ட துணைச் செயலாளா் கோபால், தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாவட்ட தலைவா் ஞானசேகா், அனைத்திந்திய இளைஞா் பெருமன்ற மாவட்ட செயலா்அரவிந்தகுமாா், இந்திய மாணவா் சங்க மாநிலச் செயலாளா் அகமது, மாதா் சம்மேளன மாநில துணைச் செயலாளா் நதியா உள்பட பலா் பங்கேற்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments