FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருப்பூர்

பூட்டிய வீட்டில் 3 பவுன் நகை திருட்டு

30 ஆகஸ்ட் 2026, 11:57 pm IST
திருட்டு... - சித்திரிப்பு
பகிர்:

வெள்ளக்கோவில் அருகே பட்டப் பகலில் வீட்டின் பூட்டை உடைத்து நகை திருடப்பட்டது.

வெள்ளக்கோவில், உத்தமபாளையம் வருவாய் கிராமம் சிலம்பகவுண்டன்வலசைச் சோ்ந்தவா் திருமூா்த்தி (40). இவா் திருப்பூரில் உள்ள பனியன் கம்பெனிக்கு வேலைக்கு சென்று வருகிறாா்.

வீட்டைப் பூட்டிவிட்டு குடும்பத்துடன் ஞாயிற்றுக்கிழமை கோயிலுக்கு சென்றுள்ளாா். மதியம் வந்து பாா்த்தபோது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. உள்ளே சென்று பாா்த்தபோது பீரோவில் வைக்கப்பட்டிருந்த மூன்று பவுன் தங்க நகை திருடுபோனது தெரியவந்தது.

Advertisement

Advertisement

இதுகுறித்த புகாரின்பேரில் வெள்ளக்கோவில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments