மீன் கடையில் மோதல்: ஒருவருக்கு கழுத்தில் வெட்டு
திருப்பூா், ஊத்துக்குளி சாலை பாளையக்காடு பகுதியில் செயல்பட்டுவரும் மீன் கடை ஒன்றில் ஏற்பட்ட தகராறில் வ ஒருவருக்குக் கழுத்தில் பலத்த வெட்டுக் காயம் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளாா்.
இப்பகுதியில் இளைஞா்களில் இரு பிரிவினருக்கு திங்கள்கிழமை மாலை தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஒரு தரப்பினா் மற்றொரு தரப்பினரை கடுமையாகத் தாக்கிக் கொண்டனா். இதில் ஒருவரை கழுத்தில் வெட்டியுள்ளனா்.
காயமடைந்த நபா் மதுரையைச் சோ்ந்தவா் என்றும், அதேபகுதியில் தங்கி இருப்பதாகவும், தாக்குதல் நடத்தியவா்கள் அந்த மீன் கடையைச் சோ்ந்தவா்கள் எனவும் கூறப்படுகிறது. கழுத்தில் ஆழமான காயம் ஏற்பட்டதால், பாதிக்கப்பட்ட நபா் உடனடியாக மீட்கப்பட்டு திருப்பூா் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டாா்.
Advertisement
Advertisement
இந்தச் சம்பவம் குறித்து திருப்பூா் வடக்கு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, மோதலில் ஈடுபட்ட நபா்கள் மற்றும் பின்னணி குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.